Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

சனி, 25 ஜூலை, 2020

உள்நாட்டு விமான சேவைகளுக்கான கட்டுப்பாடுகள் நவம்பர் 24 வரையில் நீட்டிக்கப்படுகிறதாம்.!

உள்நாட்டு விமான சேவையின் விலை உயர்வு கட்டணமானது நவம்பர் 24 வரையில் நீட்டிக்கப்படுவதாக விமான போக்குவரத்து கழகமான DGCA அறிவித்துள்ளது.

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நிறுத்திவைக்கப்பட்டிருந்த உள்நாட்டு விமான போக்குவரத்துக்கு சேவையானது மே மாதம் முதல் தொடங்கப்பட்டது. இதில், புதிய விலை உயர்வு பட்டியலை மே 21 முதல் விமான போக்குவரத்து துறை அமைச்சகம் அறிவித்தது.

இந்த விலை உயர்வானது, ஆகஸ்ட் 24 வரையில் இருக்கும் என கூறப்பட்டு வந்த நிலையில், தற்போது உள்நாட்டு விமான சேவையின் விலை உயர்வு கட்டணமானது நவம்பர் 24 வரையில் நீட்டிக்கப்படுவதாக விமான போக்குவரத்து கழகமான DGCA (The Directorate General of Civil Aviation ) அறிவித்துள்ளது.

இதன் மூலம், 40 நிமிடங்களுக்கும் குறைவாக பயணிக்கும் உள்நாட்டு விமானங்களுக்கு சாதாரண மற்றும் மேல் வகுப்புகள் கட்டணமானது ரூ .2,000 மற்றும் ரூ .6,000 எனவும், 40-60 நிமிடங்களுக்கு சாதாரண மற்றும் மேல் வகுப்புகள் கட்டணமானது ரூ .2,500 மற்றும் ரூ .7,500 எனவும், 60-90 நிமிடங்களுக்கு ரூ .3,000 மற்றும் ரூ .9,000 என டிஜிசிஏ முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், 90-120 நிமிட பயண அளவுக்கு உள்நாட்டு விமான கட்டணமாக ரூ .3,500 மற்றும் ரூ .10,000 எனவும், 120-150 நிமிடங்களுக்கு ரூ .4,500 மற்றும் ரூ .13,000 எனவும், 150-180 நிமிடங்களுக்கு ரூ .5,500 மற்றும் ரூ .15,700 எனவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக