Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வெள்ளி, 31 ஜூலை, 2020

ரஜினியின் அண்ணாத்த படம் கைவிடப்பட்டதா?: உண்மை இதோ


rajinikanth

சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வந்த அண்ணாத்த படம் கைவிடப்பட்டதாக வெளியான தகவல் குறித்த உண்மை தெரிய வந்துள்ளது.


தர்பார் படத்தை அடுத்து சிறுத்தை சிவா இயக்கத்தில் அண்ணாத்த படத்தில் நடித்து வந்தார் ரஜினிகாந்த். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் அண்ணாத்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் இருக்கும் ராமோஜிராவ் பிலிம்சிட்டியில் நடைபெற்றது.
அண்ணாத்த படத்தில் ரஜினிக்கு தங்கையாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். நயன்தாரா வழக்கறிஞராக நடிப்பதாக கூறப்படுகிறது. பல ஆண்டுகள் கழித்து குஷ்பு, மீனா ஆகியோர் ரஜினியுடன் சேர்ந்து நடிக்கிறார்கள். ஹைதராபாத்தில் நடந்த படப்பிடிப்பில் குஷ்பு கலந்து கொண்டார்.

கொரோனா வைரஸ் பிரச்சனையால் அண்ணாத்த பட ஷூட்டிங் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 4 மாதங்களாக படப்பிடிப்பு நடக்கவில்லை. இந்நிலையில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் ரஜினியிடம் தன் சம்பளத்தை குறைத்துக் கொள்ளுமாறு கூறியதாக தகவல் வெளியானது. இதையடுத்து ரஜினி தன் சம்பளத்தை திருப்பிக் கொடுத்துவிட்டார் என்று கூறப்பட்டது.

இதற்கிடையே அண்ணாத்த படம் கைவிடப்பட்டதாக பேச்சு கிளம்பியது. இந்நிலையில் அண்ணாத்த படத்தை கைவிடும் திட்டம் எதுவும் இல்லை என்று சன் பிக்சர்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. ரசிகர்கள் யாரும் வதந்திகளை நம்ப வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பிரச்சனை தீர்ந்த பிறகு அண்ணாத்த ஷூட்டிங் துவங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவல் அறிந்த ரஜினி ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளார்கள்.

அண்ணாத்த படத்தின் 50 சதவீத காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளது. படத்தை அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியிட திட்டமிட்டுள்ளார்கள். அண்ணாத்த படத்திற்கு டி. இமான் இசையமைக்கிறார். சிறுத்தை சிவாவுக்கு ஆங்கிலத்தில் பிடிக்காத வார்த்தை அப்டேட். அதனால் அண்ணாத்த படம் குறித்து அப்டேட் கொடுக்காமல் அவர் வேலையை மட்டும் பார்க்கிறார்.


அஜித் சிறுத்தை சிவா இயக்கத்தில் தொடர்ந்து நான்கு படங்களில் நடித்தபோது அப்டேட் கேட்டு ரசிகர்கள் கெஞ்சினார்கள், கதறினார்கள். ஆனால் சிவா கண்டுகொள்ளவே இல்லை. தற்போது அண்ணாத்த அப்டேட் கொடுக்காமல் இருப்பதை பார்த்த அஜித் ரசிகர்கள் ரஜினி ரசிகர்களுக்காக பாவப்படுகிறார்கள்.

அடிக்கடி அப்டேட் கொடுத்துக் கொண்டிருப்பதில் சிவாவுக்கு நம்பிக்கை இல்லை. முழுப் படத்தையும் எடுத்து வெளியிடுகிறேன், பார்த்துக் கொள்ளுங்கள் என்று இயக்கத்தில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறார்.

அண்ணாத்த படத்தை அடுத்து ரஜினிகாந்த் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. அந்த படத்தை உலக நாயகன் கமல் ஹாஸன் தன் ராஜ்கமல் நிறுவனம் மூலம் தயாரிக்கிறார். படத்தை தயாரிப்பதுடன் கவுரவத் தோற்றத்தில் கமல் நடிக்கப் போகிறார் என்று கூறப்பட்டது.

இந்நிலையில் கமல், ரஜினி சேரும் படம் கைவிடப்பட்டதாக தகவல் வெளியானது. ஆனால் படம் கைவிடப்படவில்லை என்பது பின்னர் தெரிய வந்தது.


படத்தை தயாரித்தாலும் கமல் நடிப்பாரா என்பது இதுவரை தெரியவில்லை. கமலும், ரஜினியும் சேர்ந்து நடித்தால் நன்றாக இருக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள். பல ஆண்டுகள் கழித்து அவர்களை திரையில் சேர்த்துப் பார்க்க ரசிகர்கள் ஆசைப்படுகிறார்கள். ரசிகர்களின் ஆசை நிறைவேறுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.


கடந்த சில நாட்களுக்கு முன்பு ரஜினி மாஸ்க் அணிந்து லம்போர்கினி கார் ஓட்டிச் சென்றபோது எடுக்கப்பட்ட புகைப்படங்களும், வீடியோவும் வெளியாகி வைரலானது என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக