>>
  • இனிப்பு மற்றும் கா‌ர கொழுக்கட்டை செய்வது எப்படி?
  • >>
  • இராகு-கேது தோஷங்களை நீக்கும் தென் காளஹஸ்தி – கத்திரிநத்தம் காளஹஸ்தீஸ்வரர் கோயில்
  • >>
  • 06-05-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • 10 வகை பாயாசம்
  • >>
  • திருக்கொடியலூர் ஆனந்தவல்லி சமேத அகத்தீஸ்வரர் கோவில், திருவாரூர்
  • >>
  • 28-04-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • ஆயுள்விருத்தி தரும் பரங்கிப்பேட்டை ஆதிமூலேஸ்வரர் திருக்கோயில்...!
  • >>
  • சக்கரப்பள்ளி சக்ரவாகேஸ்வரர் திருக்கோயில் – தேவாரம் முழங்கும் தஞ்சாவூர் மாமணிதலம்!
  • >>
  • 16-04-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • கிரெடிட் கார்டு மற்றும் அமேசான் கிப்ட் கார்டு - எதை தேர்வு செய்வது? முழுமையான ஒப்பீடு!
  • Learn Carnatic Music in Online

    Click here to join our WhatsApp channel

    Click here to join our Telegram Channel

    வியாழன், 23 ஜூலை, 2020

    இந்தியா: சரியான நேரத்தில் களமிறங்கிய அதிநவீன ஸ்மார்ட் ஹெல்மெட்.!

    இதை கொண்டு ஒரே
    அண்மையில் வெளிவந்த தகவலின் அடிப்படையில், சென்னையை விட பிற மாவட்டங்களின் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை சுமார் 6 மடங்கு அதிகரித்துள்ளது. இந்த கொரோனா வைரஸ் முதலில் ஜலதோஷம், உடல் வலி, இருமல், தும்மல், காய்ச்சல், நெஞ்சுவலி கடைசியில்
    மரணம் வரை ஏற்பட வாய்ப்பு உள்ளது. குறிப்பாக இது லேசான காய்ச்சலில்தான் இது துவங்கும் எனக் கூறப்படுகிறது.
    கொரோனா வைரஸ் தொற்று இருப்பவர்களுடன் நேரடி தொடர்பு வைத்திருந்தால் வைரஸ் தொற்று வேகமாக பரவும் அபாயம் இருக்கிறது. இருப்பினும் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் நோயாளிகளை நேரடியாக சோதித்து பார்க்க வேண்டிய கட்டாயத்தில் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
    மும்பையிலும் கொரோனாவைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருக்கிறது, குறிப்பாக இந்தியாவில் அதிக கொரோனா வைரஸ் பாதிப்பு கொண்ட பகுதிகளில் ஒன்றாக மும்பை இருக்கிறது. இந்த நிலையில் கொரோனா வைரஸ் பாதிப்புகளை கண்டறிய அதநவீன ஸ்மார்ட் ஹெல்மெட்கள் பயன்படுத்தப்படுகின்றன.
    அதாவது இந்த ஸ்மார்ட் ஹெல்மட்களில் போர்டபிள் தெர்மோஸ்கேனர் பொறுத்தப்பட்டுள்ளன, இது உடல் வெப்பத்தை கண்டறியும் சாதனம் ஆகும். முன்னதாக இதேபோன்ற ஸ்மார்ட் ஹெல்மெட்கள் துபாய்,இத்தாலி மற்றும் சீனாவில் பயன்படுத்தப்பட்டன. இதை கொண்டு ஒரே
    நிமிடத்தில் பலருக்கு உடல் வெப்ப சோதனை செய்ய முடியும்.

    மேலும் வழக்கமான ஸ்கிரினீங் வழிமுறைகளை பயன்படுத்தினால் அதிகநேரம் ஆகும்.உதரணமாக 20ஆயிரம் பேர் அடங்கிய பகுதியில் 300பேருக்கு சோதனை செய்ய மூன்று மணி நேரம் ஆகும் என தொண்டு நிறுவனத்தை சேர்ந்த மருத்துவ உதவியாளரான நீலு ஜெயின் என்பவர் தெரிவித்தார்.
    ஆனால் இந்த ஸ்மார்ட் ஹெல்மட்களை பயன்படுத்தும் போது இரண்டறை மணி நேரத்தில் 6 ஆயிரம் பேருக்கு சோதனை செய்துவிட முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஹெல்மட்கள் மும்பை மற்றும் பூனே நகரங்களுக்கு நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளன. மேலும் இரு நகரங்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது.

    குறிப்பாக சோதனையை அதிவேகமாக செய்துவிடும் இந்த ஸ்மார்ட் ஹெல்மெட் விலை ரூ.6-லட்சம் ஆகும். மேலும் இவை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

    கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக