சாம்சங்
நிறுவனம் தொடர்ந்து புதிய சதனங்களை அறிமுகம் செய்த வண்ணம் உள்ளது என்றுதான்
கூறவேண்டும்,குறிப்பாக இந்நிறுவனத்தின் ஸ்மார்ட்போன் மற்றும் டிவி மாடல்களுக்கு
நல்ல வரவேற்பு உள்ளது என்றுதான் கூறவேண்டும்.
சாம்சங்
நிறுவனம் இந்தியாவில் புதிய பிஸ்னஸ் டிவி வரம்பை அறிமுகப்படுத்துவதாக
அறிவித்துள்ளது. குறிப்பாக இந்த மாடலின் ஆரம்ப விலை ரூ.75,000-ஆக உள்ளது. மேலும்
இதுபற்றிய முழுவிவரங்களை பார்ப்போம்.
சாம்சங் பிஸ்னஸ் டிவி தொடர் 43-இன்ச், 50-இன்ச், 55-இன்ச் மற்றும் 70-இன்ச் வகைகளில் கிடைக்கும் என்ற தெரிவிக்கப்பட்டுள்ளது,பின்பு இந்த சாதனங்களின் விலை ரூ .75,000 முதல் ரூ.175,000 வரை இருக்கிறது. குறிப்பாக இந்த டிவி மாடல்களுக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது இந்நிறுவனம்.
இப்போது
அறிமுகம் செய்யப்பட்ட இந்த பிஸ்னஸ் டிவி மாடல்கள் மூன்று ஆண்டு உத்தரவாதத்துடன்
வருகிறது, இது வணிக உரிமையாளர்களுக்கு நீண்ட கால ஆதரவை வழங்குகிறது. குறிப்பாக
தனித்துவமான மென்பொருள் மற்றும் வன்பொருள் வசதியுடன் இந்த சாதனங்கள்
உருவாக்கப்பட்டுள்ளது.
மேலும்
சாம்சங் பிஸ்னஸ் டிவி மாடல்கள் சிறு மற்றும் நடுத்தர வணிகங்களுக்கு பயனர்
அனுபவத்தை மறுவரையறை செய்ய உதவும். சாம்சங் பிஸ்னஸ் டிவிக்கள் ஒரு நாளைக்கு 16
மணிநேரம் இயங்குவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.மேலும்
அமைக்கப்பட்ட வணிக நேரங்களில் தானாக இயங்க ஆன் / ஆஃப் டைமருடன் வருகின்றன.
தனிப்பயனாக்கக்கூடிய
இலவச templates-க்கு கூடுதலாக, சாம்சங் வணிக டிவி பயன்பாடு உள்ளடக்கத்தின் தொலை
நிர்வாகத்தை அனுமதிக்கிறது. இந்த பயன்பாடு டிவியை எளிதாக DIY நிறுவ உதவுகிறது.
வணிக டிவி பயன்பாட்டைப் பதிவிறக்கிய பிறகு, பயனர்களின் சாதனங்கள் தானாக டிவியுடன்
இணைக்கப்பட்டு உடனடி பயன்பாட்டிற்கு கிடைக்கின்றன. இந்த உள்ளடக்க மேலாண்மை பயன்பாடு
உள்ளடக்கத்தை
எளிதாக பதிவேற்றுவதை வழங்குகிறது.
எங்கள்
நுகர்வோரின் எப்போதும் வளர்ந்து வரும் வணிகத் தேவைகளைப் புரிந்துகொள்வதற்கும்,
உயர்தர தீர்வுகளுடன் அவற்றை நிவர்த்தி செய்வதற்கும் நாங்கள் தொடர்ந்து முயற்சி
செய்கிறோம் என சாம்சங் நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய
சாம்சங் பிஸ்னஸ் டிவியுடன், பல்வேறு சிறு மற்றும் நடுத்தர வணிகங்களின் தேவைகளைப்
பூர்த்தி செய்ய விரும்புகிறோம், மேலும் அவற்றைத் தொடர்புகொள்வதற்கும் திறம்பட
செயல்படுவதற்கும் தொந்தரவில்லாமல் இருப்பதற்கும் உதவுகிறோம் எனவும் எங்கள் சமீபத்திய
வணிக தொலைக்காட்சிகள் உணவகங்கள், சில்லறை கடைகள், ஷாப்பிங் வளாகங்கள்,
வரவேற்புரைகள் போன்ற
நுகர்வோருக்கு
இறுதி நுகர்வோருக்கு அனுபவத்தை மறுவரையறை செய்ய உதவும் எனவும் சாம்சங் நிறுவனம்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக