வாழக்கையில் சாதிக்க இவையெல்லாம் மிகவும் அவசியம்.
இன்று அதிகமானோர் வாழ்தால் இப்படி தான் வாழ வேண்டும் என்று நினைப்பதை விட, இது என்னடா வாழ்க்கை, சீக்கிரமா இந்த வாழ்க்கை முடிஞ்சா நல்ல இருக்கும் என்று யோசிப்பவர்கள் தான் அதிகம். இதற்கு காரணம் இப்படிப்பட்டவர்கள் வாழ்க்கையில், தொடர்ந்து தோல்விகளை சந்தித்தவர்களாக இருக்கலாம் அல்லது மகிழ்ச்சி என்பது அவர்களது வாழ்க்கையில் இல்லாமலேயே பபோயிருக்கலாம்.
இப்படிப்பட்டவர்கள் அவர்களது வாழ்க்கையில் முன்னேறி வர வேண்டும் என்றால், முதலில் அவர்களுக்கே அவர்களை குறித்த ஒரு நன்மதிப்பு உருவாக வேண்டும்.
நம்முடைய நடை, உடை பாவனைகளை மற்றவர்கள் பார்க்கும் போது, இவன் ஒரு தைரியசாலி, இவனால் எதையும் சாதிக்க முடியும் என்ற தோற்றம் தோன்ற வேண்டும். அதற்கு நாம் நமது நெஞ்சை நிமித்தி தோலை உயர்த்தி நிற்க வேண்டும். இந்த நடைமுறை, நமது வாழ்ககையையும், நமது எதிர்காலத்தையும் குறித்த ஒரு நன்மதிப்பை நமக்குள்ளேயே தோற்றுவிப்பது மட்டுமல்லாமல், பார்ப்பவர்களுக்கும் நம் மீது ஒரு நன்மதிப்பை தோற்றுவிக்கும்
பொதுவாக நம்முடைய உடல் தோற்றத்திற்கும், நமது சிந்தனை திறனுக்கும் ஒரு தொடர்புண்டு. அது என்னவென்றால், சில ஆய்வு முடிவுகள் இதுகுறித்து கூறுகையில், ஒரு நபர் சோகமான முக பாவனையை வைத்திருந்தார் என்றால், சற்று நேரத்தில் அவர் சோகமாகவே இருப்பதாக உணர தொடங்கி விடுவார்.
நமது உடல் தோற்றம் எவ்வாறு இருக்கிறதோ, அவ்வாறு தான் நமது நடைமுறைகளும் , செயல்பாடுகளும் இருக்கும். நாம் நேர்மறையான சிந்தனைகளை சிந்திக்கும் போது, நமது உடல் தோற்றம் அல்லது நடைமுறைகளை கவனித்து பார்த்தால், ஒரு கெம்பீரமான தோற்றம் இருப்பது தோன்றும்.
அந்த சூழலில், நம்மை நாமே நிதானித்து பார்த்தல், நம்முடைய எண்ணங்களில், இதை நம்மால் செய்ய முடியாது என்று தோன்றுவதை விட, நம்மால் முடியாது என்று ஒன்று உள்ளாதா? என்ற தன்னம்பிக்கையான எண்ணங்கள் தான் தோன்றும்.
எனவே, வாழ்க்கையில் என்றுமே, நாம் சாதிக்க வேண்டும், மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று நினைத்தால், மேற்குறிப்பிட்ட வண்ணம் நம்மை நாமே மாற்றிக் கொள்வது மிகவும் அவசியம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக