Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

புதன், 22 ஜூலை, 2020

அது என்ன மறைமுக மன அழுத்தம்? அதை எப்படி கண்டுபிடிப்பது?


மன அழுத்தம் பற்றி கேள்வி பட்டிருக்கிறோம். அது என்ன, மறைமுக அல்லது இரண்டாம் வகை மன அழுத்தம். இதுவும் இரண்டாம் வகை புகை பிடிப்பவரை போன்றே மிகவும் ஆபத்தானது. அதாவது, உங்களுக்கு புகை பிடிக்கும் பழக்கம் இல்லாமல் இருக்கலாம், ஆனால் இன்னொருவர் புகை பிடிக்கும் பொழுது நீங்கள் அருகில் இருந்தால், வெளி வரும் புகையால் உங்களுக்கும் ஆபத்து.
அதே போல், உங்களுக்கு மன அழுத்த பிரச்சினைகள் ஏதும் இல்லாமல் இருக்கலாம், ஆனால், மன அழுத்தத்துடன் இருக்கும் ஒருவரின் அருகில் இருக்கும் பொழுது உங்களை அறியாமலேயே உங்களுக்கும் மன அழுத்தம் ஏற்படுகிறது. இவ்வாறு மன அழுத்தம் உங்கள் துணையிடம் இருந்தோ, குடும்ப உறுப்பினர்களிடம் இருந்தோ, உடன் வேலை பார்ப்பவர்களிடம் இருந்தோ அல்லது நெருங்கிய நண்பர்களிடம் இருந்தோ உங்களுக்கு பரவிவிடுகிறது. சுருக்கமாக சொன்னால், எதிர்மறை எண்ணம் உள்ள மன அழுத்தம் உள்ள நபர்களின் அருகில் இருக்கும் பொழுது, உங்களுக்கும் அதே போன்ற மன அழுத்தம் ஏற்படும்.
இதில் பெரிய பிரச்சனை என்னவென்றால், இவ்வாறு பாதிக்கப்படும் நபர்கள் பெரும்பாலோனோருக்கு தாங்கள் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளோம் என்று தெரியாமலேயே இருக்கிறார்கள். எனவே ஒவ்வொருவரும் இது போன்ற இரண்டாம் வகை மன அழுத்தத்தால் பாதிக்கப்படுகிறோம் என்று அவ்வப்பொழுது தங்களை சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். அது எப்படி செய்வது மற்றும் மன ஆரோக்கியத்தை எப்படி பேணிக்காப்பது என்பதை பற்றி பின்வரும் பத்திகளில் காணலாம்.
எந்தவொரு காரணமும் இல்லாமல் வரும் மன அழுத்தம்
நமக்கு பொதுவாக ஏற்படும் மன அழுத்தம் ஏன் ஏற்படுகிறது என்பதை நம்மால் யூகிக்க முடியும். அனால் இந்த மறைமுக மன அழுத்தம் எப்படி வந்தது, யாரின் மூலம் வந்ததற்கான காரணத்தை அறிவது மிகவும் கடினம். ஏனென்றால் இவை உங்கள் மூளையில் ஏற்படுவதில்லை, மாறாக இன்னொருவருடைய தாக்கத்தால் ஏற்படுவது.
இரண்டாம் வகை புகைப்பிடிப்பவரை போன்றே இவ்வகையான மன அழுத்தமும் பெரும் பாதிப்பகளை ஏற்படுத்த வல்லது. இது உங்கள் நரம்பு மண்டலத்தை நேரடியாக பாதித்து, உங்கள் சிந்திக்கும் மற்றும் ஒருமுகப்படுத்தும் திறனை குறைத்து உங்கள் தினசரி பணிகளை சரிவர செய்யவிடாமல் பாதிக்க கூடியது. உங்களுடன் வேலை செய்பவருடனோ அல்லது உங்கள் துணையுடனோ ஏதேனும் சண்டையிட்ட பிறகு உங்களை அறியாமலே ஒரு வித காரணத்தால் உங்களக்கு மன அழுத்த உணர்வு ஏற்படுகிறது.
பிரச்சினையின் தன்மையை பொறுத்து, இந்த மன அழுத்த உணர்வு உங்களுக்கு சில மணி நேரங்களில் இருந்து சில நாட்கள் வரை நீடிக்கலாம். இவ்வாறு மன அழுத்தத்திற்கு உட்படுவதற்கான காரணத்தை உங்களால் அனுமானிக்க முடியவில்லையென்றால் அதன் பெயர்தான் மறைமுக அல்லது இரண்டாம் வகை மன அழுத்தம். இப்படிப்பட்ட சூழ்நிலையில் குங்குமப்பூ கலந்த தேநீர் பருகுவது மன அழுத்ததை வெகுவாக குறைக்கும்.
அவநம்பிக்கை மற்றும் குழப்பமாகவே இருப்பது
நீங்கள் எப்பொழுதும் நேர்மறையாக சிந்திக்கும் எண்ணம் கொண்டவராக இருப்பீர்கள். ஆனால் திடீரென்று ஒரு நாள், உங்களை சுற்றி நடக்கும் எந்த விஷயங்களும் உங்களுக்கு பிடிக்காமல் இருப்பது போன்ற பிம்பம் உங்களுள் ஏற்படும். இது நீங்கள் தேவையில்லாமல் உங்களை சுற்றி இருப்பவர்களின் பிரச்சினைகளை நினைத்து மறைமுக மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளீர்கள் என்பதற்கான எச்சரிக்கை மணி.
எப்பொழுதும் சோர்வாகவே இருப்பது
நீங்கள் சில நாட்கள் முன்பு வரை வாழ்க்கையை மிக மகிழ்ச்சியாகவும், சந்தோசமாகவும் அனுபவித்து வாழ்ந்து கொண்டிருப்பீர்கள். ஆனால், இப்பொழுது உங்களால் அப்படி இருக்க முடியாமல் இருக்கும். உங்களை சுற்றி இருக்கும் நபர்கள் எப்பொழுதும் எதனை பற்றியாவது குறை கூறி கொண்டே இருப்பவராக இருந்தால், உங்களுக்கும் அந்த தாக்கம் ஏற்பட்டு, உங்களுடைய துடிப்பான தன்மையை குறைத்துவிடும். இதனால் உங்களுக்கு சோர்வடைந்தது போன்ற உணர்வு ஏற்படும். சோர்வு மட்டுமின்றி நாளடைவில், இது உங்கள் உடல் நலத்திலும் பாதிப்பை ஏற்படுத்தும் இந்த நிகழ்வும் நீங்கள் மறைமுக மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளீர்கள் என்பதற்கான அறிகுறி. எனவே எப்பொழுதும் எதிர்மறையான அல்லது எதற்கெடுத்தாலும் குறை கூறி கொண்டிருக்கும் நபர்களிடம் பழகுவதை தவிர்ப்பது உங்களுக்கு பல வகையில் நன்மையை தரும்.
திடீரென்று ஏற்படும் மோசமான அறிவாற்றல் குறைபாடு
உங்களுக்கு ஞாபக மறதி, ஒரு பொருளை எங்கே வைத்தோம் என்று ஞாபகம் இல்லாமல் இருப்பது, கவன சிதறல் இருந்தால், நீங்களும் மறைமுக மன அழுத்தத்தால் பாதிக்கபட்டுள்ளீர்கள் என்பதற்கான அறிகுறி. இந்த மாதிரியான அறிகுறிகளை சமீபத்தில் தான் நீங்கள் உணர்ந்திருந்தால், அதற்கான மூல காரணம் என்ன என்பதை நீங்கள் ஆராய்ந்து கண்டறிய வேண்டும். உங்கள் குடும்ப வாழ்க்கையிலும், அலுவலகத்திலும் எந்த ஒரு பிரச்சினையும் இல்லை என்றால், நீங்கள் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ள, நெருங்கிய மற்ற நபர்களின் தாக்கத்தினால் இவ்வாறு இருக்கிறீர்கள் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
சரியான முடிவெடுக்க முடியாமல் இருக்கிறீர்களா?
உங்கள் வேலையை பற்றியோ அல்லது உங்கள் வேலையில் ஏதேனும் முடிவெடுக்க முடியாமல் தவித்து கொண்டிருந்தாலோ, நீங்கள் மறைமுக மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருக்கலாம். இதனால் உங்கள் வேலையை நீங்கள் திறம்பட செய்ய முடியாமல் போகலாம். எனவே உங்கள் வேலையில் உங்களுக்கு எப்பொழுதும் ஒரு திருப்தி ஏற்படாது.
மேற்கூறிய எல்லா காரணங்களும் உங்களுக்கு மறைமுகமாக மன அழுத்தத்தை தர கூடியது. எனவே எப்பொழுதும் எதிர்மறையான எண்ணங்கள் இருப்பவர்களுடன் பழகுவதை தவிர்த்து எப்பொழுதும் மகிழ்ச்சியாகவே இருங்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக