உத்திர பிரதேசத்தின் மிர்சாபூரில்
தூங்கிக் கொண்டிருந்த மனிதனின் பேண்ட்டில் நாகப்பாம்பு நுழைந்தது பரபரப்பை
ஏற்படுத்தியது.
மிர்சாபூர்: பாம்பென்றால் படையே
நடுங்கும் என்னும் போது, நாகப் பாம்பு ஒன்றை தனது பேண்ட்டில்
நுழைந்திருபப்தை கண்ட ஒரு மனிதனின் நிலை என்பதை நினைத்தாலே பயமாக இருக்கிறது
அல்லவா..!!!
அதிர்ச்சியூட்டும் இந்த மற்றும்
திகிலூட்டும் சம்பவம் உத்தரபிரதேசத்தின் மிர்சாபூரில் நடந்தது, அங்கு லவ்கேஷ்
குமார் என்ற தொழிலாளி சில மின் வேலைகளை முடித்துவிட்டு கிராமத்தில் ஒரு அங்கன்வாடி
மையத்தில் மற்ற தொழிலாளர்களுடன் தூங்கிக் கொண்டிருந்தார்.
திடீரென்று, நள்ளிரவில் தனது ஜீன்ஸ்
ஏதோ ஊர்ந்து செல்வதை போன்ற உணர்வு ஏற்பட்டது. என்ன என்று பார்த்தால், அது ஒரு
நாகம்! என்ன நடந்தது அவர் ஒரு இரவு முழுவதும் பாம்பைத் தொந்தரவு செய்யாமல்
இருக்க தான் அசையாமல் அப்படிஏ நின்று கொண்டிருந்தார். அசைந்தால், பாம்பு கொத்தி
விடும் என்ற பயம் தான் காரணம்
அதை அதிர்ஷ்டம் அல்லது ஒரு அதிசயம்
என்று அழைக்கலாம். அவர் கிட்ட தட்ட 7 மணி நேரம் நின்று கொண்டிருந்தார். அப்போது
பாம்பு லவ்கேஷைக் கடிக்கவில்லை.
இதற்கிடையில், உடன் இருந்த சக
ஊழியர்கள் பாம்பு பிடிப்பவரை அழைத்து வர கிராமத்திற்குள் ஓடினர். ஆனால்,
காலையில்தான் பாம்பு பிடிப்பவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து ஜீன்ஸ் பேண்டை கவனமாக
கிழித்து, பாம்பை வெளியே எடுத்தனர்
பாம்பு அவரைக் கடித்தால் அவரருக்கு
மருத்துவ உதவி அளிக்க ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டது. அதிர்ஷ்டவசமாக, அவரை
பாம்பு கடிக்காமல் தப்பினார். பாம்பிற்கும் ஒரு வித பாதிப்பும் இல்லாமல்
பிடிக்கப்பட்டது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக