Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

சனி, 18 ஜூலை, 2020

தங்கம் மற்றும் வெள்ளி முகக்கவசங்கள் விற்பனை அமோகம்… தேவை அதிகரிக்கிறது

தங்கம் மற்றும் வெள்ளி முகக்கவசங்கள் விற்பனை அமோகம்… தேவை அதிகரிக்கிறது

பாதுகாப்பு முகக்கவசங்கள் என்பது தற்போது தினசரி அணியும் ஒரு அத்தியாவசியமான பொருளாகிவிட்ட நிலையில் ஆபரணங்களுக்கு பதிலாக தங்கம் மற்றும் வெள்ளியில் உருவாக்கப்பட்ட முகக்கவசங்கள் பிரபலமடைந்து வருகின்றன. 
“முகக்கவசத்தை ஏன் ஆபரணமாக பயன்படுத்தக்கூடாது? தேவையில்லை என்னும்போது, அதை வேறு நகையாக மாற்றிக் கொள்ளலாம்.  தங்கத்தின் மதிப்பு அதிகரித்துக் கொண்டே செல்லும் நிலையில் தங்க்த்தில் முகக்கவசம் செய்வது உகந்தது”என்கிறார் கோயம்புத்தூரின் RK Jewel Works உரிமையாளர் ராதாகிருஷ்ணன் சுந்தரம் ஆச்சார்யா.
பாரம்பரிய பொற்கொல்லரான ராதாகிருஷ்ணன் 35 ஆண்டுகளுக்கும் மேலாக நகை தயாரிக்கும் துறையில் பல்வேறு நிலைகளில் பணியாற்றியுள்ளார். மூன்று ஆண்டுகளுக்கு முன்பு தங்கத்தால் செய்யப்பட்ட துணிகளை தயாரித்து விற்பனை செய்யத் தொடங்கினார். அவை பிரபலமானது அவை பெரும்பாலும் விசேஷமான சந்தர்ப்பங்களுக்காகவும், தெய்வங்களை அலங்கரிப்பதற்கும், குழந்தைகளின் பிறந்தநாள்  கொண்டாடத்திற்காகவும் தயாரிக்கப்பட்டவை.  
விலைமதிப்பற்ற உலோகங்களிலிருந்து துணிகளை தயாரிப்பதில் பல ஆண்டுகளாக கிடைத்த அனுபவத்தின் அடிப்படையில் ராதாகிருஷ்ணன் விலைமதிப்பற்ற உலோகங்களால் முகக்கவசங்களை செய்யலாம் என்ற முடிவுக்கு வந்தார்.
"நாங்கள் அவற்றை 18 மற்றும் 22 காரட் ஹால்மார்க் சான்றளிக்கப்பட்ட தங்கத்தில் முகக்கவசங்களை உருவாக்கலாம்.  இந்த தங்க முகக்கவசங்களின் தூய்மையையும் உறுதி செய்யலாம். வெள்ளியைப் பொறுத்தவரை 92.5 ஸ்டெர்லிங் (Sterling) வெள்ளியில் மட்டுமே இதை உருவாக்க முடியும். சுமார் 50 கிராம் எடையில் தயாரிக்கலாம். முகமூடியின் துணி பகுதியில் 6 கிராம் அல்லது அதற்கு அதிகமான அளவு உலோகங்களை பயன்படுத்தலாம். வெள்ளி முகக்கவசங்களின் விலை15000 ரூபாயில் தொடங்குகிறது. தங்க முகக்கவசங்களின் விலை 2,75,000 ரூபாயிலிருந்து தொடங்குகிறது” என்று ராதாகிருஷ்ணன் கூறுகிறார்.
இது தனது சொந்த தயாரிப்பு என்பதால், உலோக முகக்கவசங்களை உருவாக்கும் செயல்முறையை ரகசியமாக வைத்திருப்பதாக அவர் கூறுகிறார். இந்த சிறப்பு முகக்கவசங்களை தயாரிப்பதில் 90 சதவிகித பணிகள் கைவேலை ஆகும். இந்த விலைமதிப்புள்ள முகக்கவசங்களை தானே தயாரிக்கிறார், அவரது குடும்பத்தினரே அவருக்கு உதவி செய்கின்றனர். இந்த முகக்கவசங்களைத் தயாரிக்க ஏழு நாட்கள் கடின உழைப்பு தேவைப்படுகிறது.
"நாங்கள் 0.06 மிமீ தடிமன் கொண்ட தங்க கம்பிகளை எடுத்துக் கொள்கிறோம். இது மட்டும் தான் இயந்திரத்தால் செய்யப்படும் வேலை. நேர்த்தியான மற்றும் நெகிழ்வான தங்கக் கம்பிகளைக் கொண்டு, அவற்றை துணியாக நெய்கிறோம். பெங்களூரு, ஹைதராபாத் மற்றும் வட இந்தியாவில் இருந்து தங்கம் மற்றும் வெள்ளி முகக்கவசங்களுக்கு நிறைய ஆர்டர்கள் வந்துள்ளன. ஆனால் இவற்றை வெகு தொலைவுக்கு அனுப்புவதற்கான போக்குவரத்து வசதிகள் இல்லை என்பதால் நாங்கள் பல ஆர்டர்களை எடுத்துக் கொள்ளவில்லை. இதுவரை 9 ஆர்டர்கள் உள்ளன. நாள்தோறும் பலர் எங்களிடம் விசாரிக்கின்றனர்”என்று கடை உரிமையாளர் ராதா கிருஷ்ணன் கூறினார்.
நீண்ட நேரம் உலோகத்தால் ஆன முகக்கவசத்தை எப்படி அணிந்திருக்க முடியும் என்ற கேள்வியை தவிர்க்க முடியவில்லை.  இது துணியில் செய்யப்பட்ட முகக்கவசம் போலவே இருக்கும் என்று அவர் கூறுகிறார். "மேலே உள்ள பகுதி உலோகத்தால் ஆனது. முகக்கவசத்தின் உட்புறம் துணியின் பல அடுக்குகள் உள்ளன. சுத்தப்படுத்தி மீண்டும் பயன்படுத்தலாம், ஆனால் சுத்தப்படுத்தும்போது முறுக்குவதோ, வளைப்பதோ கூடாது. நீண்ட நாட்கள் ஆன பிறகு, ஒரு பொற்கொல்லரிடம் சென்று உட்புறம் உள்ள துணிப் பகுதியை மற்றும் மாற்றிக் கொள்ளலாம்” என்று அவர் கூறினார்.
தங்கம் மற்றும் வெள்ளி முகக்கவசம் அறிமுகப்படுத்தப்பட்டு ஒரு வாரம் தான் ஆன நிலையில், பரிசு கொடுப்பதற்காகவும், நகைக்கு மாற்றாக இந்த சிறப்பு முகக்கவசங்களை செய்துக் கொடுக்க வேண்டும் என வாடிக்கையாளர்கள் கேட்பதாக ராதாகிருஷ்ணன் கூறுகிறார். இந்த முகக்கவசங்களில் பெயரையோ அல்லது குறியீட்டையோ பதிக்க விரும்பினால் அதையும் செய்துக் கொடுப்பேன் என்று ராதாகிருஷ்ணன் கூறுகிறார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக