Kim Il Sung-ன் 26 வது நினைவு தினத்தை முன்னிட்டு, அவரை நினைவுகூரும் வகையில், அவரது கல்லறை இருக்கும் அரண்மணைக்கு கிம் ஜாங் உன் சென்றார்
கிம் ஜாங்-உன்(Kim Jong-un) உயிருடன் இல்லை என பரப்பபட்டு வந்த வதந்திகளுக்கு முற்றுப் புள்ளி வைக்கப்பட்டுள்ளது. வட கொரிய அதிபர் Kim Jong-un தனது தாத்தா கிம் இல் சுங்கின் (Kim Il Sung ) 26 வது நினைவு தினத்தில் கலந்து கொண்டதை அடுத்து, அவரது உடல்நிலை குறித்த அனைத்து ஊகங்களும் முடிவுக்கு வந்தது.
வடகொரிய தலைவர் கிம் ஜாங்-உன் புதன்கிழமை (ஜூலை 8) அன்று தனது தாத்தா கிம் இல் சுங்கின் 26 வது நினைவு தின நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
கிம் இல் சுங்கின் 26 வது நினைவு தினத்தை முன்னிட்டு, அவரை நினைவுகூரும் வகையில், அவரது கல்லறை இருக்கும் அரண்மணைக்கு சென்றார். கிம் உடன் அவரது அரசாங்கத்தின் மூத்த அதிகாரிகள், சோ ரியோங் ஹே (Choe Ryong Hae), பாக் பாங் ஜூ (Pak Pong Ju), கிம் ஜெய் ரியோங் (Kim Jae Ryong) உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Kim Il Sung மறைந்தாலும் அவர் வட கொரியாவின்(North Korea) அழிவில்லாத அதிபர் என்று கருதப்படுவதால் எந்தவொரு வட கொரிய தலைவரும் அவர் நினைவு தின நிகழ்ச்சியில் பங்கேற்க தவறியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. Kim Il Sung 1994 ஆம் ஆண்டு இறந்தார்.
முன்னதாக வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் உடல்நிலை குறித்து பல விதமான வதந்திகள் எழுந்தன. சில நாட்களுக்கு முன்பு, இதய அறுவை சிகிச்சையில் கிம் இறந்துவிட்டார் என்று வதந்திகள் பரவத் தொடங்கின.
20 நாட்களாக பொது வாழ்க்கையிலிருந்து விலகி இருந்த கிம், மே 1 அன்று புதிதாக கட்டப்பட்ட உர ஆலையில் மீண்டும் தோன்றினார், ஆனால் அதற்கு பிறகு மே 24 வரை அவர் பொதுவில் தோன்றவில்லை. புதிராகவே இருந்து வந்த வட கொரியத் தலைவர் மூன்று வாரங்களுக்கும் மேலாக பொது வாழ்க்கையிலிருந்து விலகி இருந்தார்.
ஜூன் மாதத்தில், ஜப்பானிய பாதுகாப்பு அமைச்சர் டாரோ கோனோ (Taro Kono), கிம் உடல்நிலை குறித்து சில சந்தேகங்கள் இருப்பதாகக் டோக்கியோவில் ஒரு செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.
ஆனால், இப்போது அனைத்து வதந்ததிகளுக்கும் முற்றுப் புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
கடந்த ஏப்ரல் 15 ஆம் தேதி கிம் ஜாங்-உன் தனது தாத்தா கிம் இல் சங்கின் பிறந்த தின நிகழ்வில் கலந்து கொள்ளவில்லை என்பதால், அவரது உடல் நிலை குறித்த வதந்திகள் பரவத் தொடங்கின என்பது குறிப்பிடத்தக்கது..
உள்ளூர் முதல் உலகம் வரை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக