Lenova
legion ஸ்மார்ட்போன் 30 நிமிடத்தில் முழு சார்ஜிங் செய்யக்கூடிய 5000 எம்ஏஹெச்
இரட்டை பேட்டரி, 90 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவோடு அறிமுகமாக உள்ளது.
லெனோவா லெஜியன்
கேமிங் ஸ்மார்ட்போன்
லெனோவா
லெஜியன் கேமிங் ஸ்மார்ட்போன் சில நாட்களில் அறிமுகமாக உள்ளது. இது ஸ்மார்ட்போன்
பிரியர்களுக்கான சிறந்த கேமிங் தொலைபேசியான ஆசஸ்ரோக் ஸ்மார்ட்போன் III சந்தைக்கு
விரைவில் வர இருக்கும் நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
லெனோவா
லெஜியனின் பிரத்யேக அம்சங்கள்
இந்த ஸ்மார்ட்போன் கசிவு குறித்து
வதந்திகள் தொடர்ந்து வெளியாகி வருகிறது. தற்போது அதிகாரப்பூர்வ டீசர்களின்படி
லெனோவா லெஜியனின் பிரத்யேக அம்சங்கள் குறித்து பார்க்கையில் கேமிங் திறன்
ஸ்மார்ட்போன்களில் இது தனித்து நிற்கும் எனவும் சார்ஜிங் அம்சம் சிறப்பாக
இருக்கும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
90
வாட்ஸ் இரட்டை டர்போ சார்ஜிங்
ஸ்மார்ட்போனின் புதிய 90 வாட்ஸ்
இரட்டை டர்போ சார்ஜிங் தொழில்நுட்ப அம்சம் கொண்டுள்ளது. இதன்மூலம் 30 நிமிடங்களில்
முழுமையாக சாங்ஜிங் செய்ய அனுமதிக்கிறது. இதில் 5000 எம்ஏஹெச் பேட்டரி அம்சமும்
இதில் இருக்கிறது.
இரண்டு யூஎஸ்பி போர்டல்கள்
லெனோவா
ஸ்மார்ட்போனானது இரண்டு பிரிவுகளில் சார்ஜிங் செய்ய அனுமதிக்கிறது. 90 வாட்ஸ்
சார்ஜிங் தொழில்நுட்பம் என்பது பிரத்யேக வசதி என்பதில் ஆச்சரியப்படுவதற்கில்லை.
கடந்த ஆண்டு வெளியான ஆசஸ் ரோக் ஸ்மார்ட்போன் போலவே இரண்டு யூஎஸ்பி போர்டல்கள்
இதில் உள்ளது.
சக்தி வாய்ந்த
ஸ்பீக்கர்கள்
இதில்
சக்தி வாய்ந்த ஸ்பீக்கர்கள் மற்றும் இரட்டை நேரியல் அதிர்வு மோட்டார்கள்
இருக்கிறது. இதில் ஆழமான கேமிங் சென்சார் அனுபவம் கிடைக்கும். பாப்-அப் செல்பி
கேமரா ஆதரவும் இதில் இருக்கிறது.
ஸ்னாப்டிராகன் 865+
ஆதரவு
இந்த
ஸ்மார்ட்போன் சீனாவில் ஜூலை 22 ஆம் தேதி அறிமுகப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்ட
நிலையில் முன்னதாக தற்போது ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 865+ ஆதரவோடு இருக்கும்.
லெனோவா லெஜினியன் புரோ கேமிங் ஸ்மார்ட்போன் ஜே.டி.காம்-ல் இயக்கப்படுகிறது. இதில்
இந்த ஸ்மார்ட்போன் குறித்த தகவல்கள் லீக்காகி உள்ளது.
6.47
இன்ச் அமோலெட் டிஸ்ப்ளே
இதில் 6.47 இன்ச் அமோலெட் டிஸ்ப்ளே
144 ஹெர்ட்ஸ் ஸ்னாப்டிராகன் 865+ 16 ஜிபி ரேம் மற்றும் 512 ஜிபி யுஎஃப்எஸ் 3.1
ஸ்டோரேஜ் ஆகியவை அடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் 5000 எம்ஏஹெச் இரட்டை
பேட்டரி 90 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் அம்சம் உள்ளது. இதன் விலை விவரங்கள் குறித்து
எதுவும் தற்போது வரை வெளியாகவில்லை.
64 எம்பி பிரதான கேமரா
64 எம்பி பிரதான கேமரா, 16 எம்பி
அல்ட்ரா வைட் கேமராக்கள் பின்புறத்தில் பொருத்தப்பட்டுள்ளது. லெனோவா லெஜியன் புரோ
கேமிங் 16 ஜிபி ரேம் போன்ற அம்சங்களுடன் பட்டியலிடப்பட்டது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக