தரவுகள்
திருடபடுவதாக கூறி, இந்தியா டிக்டாக் செயலியை தடை செய்தது. அமெரிக்காவை தொடர்ந்து
ஆஸ்திரேலியாவிலும் TikTok செயலி தடை செய்யப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
வீடியோ
செயலியான டிக்டாக்கிற்கு சோதனை காலம் நீடிக்கிறது. இந்தியா இந்த செயலியை தடைசெய்த
பின்னர், அமெரிக்காவும் தடை செய்யும் மனநிலையில் உள்ளது. ஆஸ்திரேலியாவும் இந்த
செயலியில் பாதுகாப்பு பிரச்சினைகள் உள்ளதாக கவலை தெரிவித்துள்ளது.
டிக்டாக் ByteDance என்ற சீன நிறுவனத்திற்கு
சொந்தமானது மற்றும் வாடிக்கையாளர் தரவை சீன அரசுடன் பகிர்ந்து கொண்டதாக குற்றம்
சாட்டப்பட்டுள்ளது.
டிக்
டாக் நிறுவனம் சமீபத்தில் தான் ஆஸ்திரேலியாவில் ஒரு அலுவலகத்தைத் திறந்தது. புதிய
அலுவலகம் நிறுவப்பட்ட பின்னர், உள்துறை அமைச்சகம் டிக்டாக்கின் செயல்பாடுகள்
குறித்து விவாதித்து வருகிறது என்று அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
தரவுகள்
திருடப்படுவது தொடர்பான பிரச்சினைகளை அரசு தீவிரமாக கருத்தில் கொண்டுள்ளது என
கூறிய பிரதமர் ஸ்காட் மோரிசன்(Scott Morrison), இது தொடர்பாக உறுதியான
நடவடிக்கைகளை எடுக்க தயங்க மாட்டோம் என கூறினார்.
1.6
மில்லியன் ஆஸ்திரேலிய இளைஞர்கள் இந்த
செயலியை பயன்படுத்தி வருகின்றனர் என குறிப்பிட்ட அவர், ஆஸ்திரேலியாவை பொருத்தவரை
எந்த வகையில் பாதுகாப்பு மீறப்படுகிறது என்பது ஆராயப்படும் என்றார்.
தியனன்மென்
சதுக்கம் பற்றிய தகவல்களை நீக்குதல் அல்லது ஹாங்காங் ஆர்ப்பாட்டங்கள் தவறான
தகவலை கொடுத்தல் போன்ற செயல்பாடுகளுக்கும் ஆஸ்திரேலியாவிற்கும் எந்த சம்பந்தமும்
இல்லை என்பதால், அது தொடர்பான விஷயங்கள் எங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தாது
என்றார்.
இருப்பினும்,
டிக்டோக் ஆஸ்திரேலியா பிரிவின் பொது மேலாளர் லீ ஹண்டர் (Lee Hunter ) நிறுவனம்,
விசாரணைக்கு முழுமையாக ஒத்துழைப்பதாக உறுதியளித்து ஆஸ்திரேலிய அரசுக்கு
கடிதம் எழுதியுள்ளார்.
கொரோனா வைரஸ் பரவலால் உலக நாடுகள் சீனா மீது
அதிருப்தியில் உள்ளன. இந்தியாவுடனான எல்லை பிரச்சனையை தொடர்ந்து லடாக்
வன்முறைக்குப் பிறகு, TikTok உட்பட 59 சீன பயன்பாடுகளை இந்தியா தடை செய்தது,
இப்போது அமெரிக்காவும் அதை பரிசீலித்து வருகிறது என்பது குற்இப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக