வாட்ஸ்அப்
பயனர்கள் நீண்ட நாடுகளாக எதிர்பார்த்துக் காத்திருக்கும் ஒரு முக்கிய அம்சம் தான்
மல்டிபிள் டிவைஸ் வாட்ஸ்அப், இந்த அம்சத்தை எதிர்பார்த்துக் காத்திருந்தவர்களுக்கு
இந்த செய்து ஒரு புது நம்பிக்கையை உருவாக்கும். ஆம், நீங்கள் எதிர்பார்த்த அந்த
அம்சம் இப்பொழுது தயாராகிக்கொண்டிருக்கிறது.
பல
சாதனங்களில் ஒரே வாட்ஸ்அப் கணக்கைப் பயன்படுத்துவதற்கான சாத்தியம் குறித்து
வாட்ஸ்அப் நிறுவனம் பல காலமாக யோசனை செய்து வருகிறது. குறிப்பாகப் பயனர்களின்
பாதுகாப்பிற்குப் பாதிப்பு இல்லாமல் இந்த அம்சத்தை எப்படிக் கையாளுவது என்பதைத்
தான் வாட்ஸ்அப் அதிகம் யோசித்து வந்தது. தற்பொழுது ஒருவழியாக இவர்களின் யோசனை
செயலில் களமிறங்கியுள்ளது.
வாட்ஸ்அப்
நிறுவனத்தின் WABetaInfo அறிக்கையில், வாட்ஸ்அப் நிறுவனம் தற்பொழுது அதன்
பயன்பாட்டை மல்டிபிள் டிவைஸ் உடன் இணைக்க தயாராகிவிட்டது. WABetaInfo அறிக்கையில்
குறிப்பிடப்பட்டுள்ளது போல், இனி வாட்ஸ்அப் பயனர்கள் 4 சாதனங்களுடன்
இணைத்துக்கொள்ளும் ஒரு புதிய அம்சத்தைச் சாத்தியமாக்கியுள்ளது. இந்த அம்சம்
தற்பொழுது இன்னும் வளர்ச்சியில் உள்ளது.
இதற்கிடையில்,
அனைத்து இணைக்கப்பட்ட சாதனங்களையும் நிர்வகிக்க ஒரு பிரத்தியேகமான UI பயன்முறையை
உருவாக்க வாட்ஸ்அப் முயன்று வருகிறது. பீட்டா பயனர்களுக்கு இந்த செயல்
இயக்கப்பட்டிருக்கும் போது, இணைக்கப்பட்ட சாதனங்கள் பிரிவு தோன்றும். இந்த பிரிவு
பயனருக்கு புதிய சாதனத்தைச் சேர்க்க உதவும், மேலும் தற்போதைய வாட்ஸ்அப் வெப் /
டெஸ்க்டாப் பிரிவைப் போலவே, இது இணைக்கப்பட்ட எல்லா சாதனங்களையும் உங்கள்
வாட்ஸ்அப் கணக்கில் காண்பிக்கும்.
அதேபோல்,
வாட்ஸ்அப் மற்றொரு அம்சத்தையும் தீவிரமாகச் சோதனை செய்து வருகிறது. வாட்ஸ்அப் இல்
நீங்கள் தேடும் சில விவரங்களை மேம்பட்ட தேடல் முறை தேட அட்வான்ஸ்டு சர்ச் மோடு
என்ற அம்சத்தை வாட்ஸ்அப் தனது 2.20.117 அண்ட்ராய்டு பீட்டா வெர்ஷனில் சோதனை செய்து
வருகிறது. இந்த 2.20.196 பீட்டா புதுப்பிப்புகளில், அம்சத்திற்கான UI ஐ மேம்படுத்த
வாட்ஸ்அப் செயல்பட்டு வருகிறது, இந்த அம்சம் ஒரு குறிப்பிட்ட செய்தி வகையைத் தேட
அனுமதிக்கும்.
இந்த
அம்சமும் வளர்ச்சியில் உள்ளது, இது எதிர்காலத்தில் அனைவருக்கும் கிடைக்கும்.
WABetaInfo வாட்ஸ்அப்பைப் பற்றி ஒரு டிஸ்கார்ட் சர்வர் உள்ளது, அங்கு நீங்கள் சாட்
செய்து உங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யலாம், ஆலோசனை வழங்கலாம் அல்லது மற்ற
பங்கேற்பாளர்களிடம் உதவி கேட்கலாம் என்று வாட்ஸ்அப் நிறுவனம் தனது WABetaInfo
அதிகாரப்பூர்வ பக்கத்தில் தெரிவித்துள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக