அப்பல்லோ 11 இல் அதிகம் அறியப்படாத உண்மைகள் குறித்து இந்த தொகுப்பில் காணலாம்.
20 ஜூலை 1969 அன்று அமெரிக்கா
அனுப்பிய அப்பல்லோ 11 நிலவில் தரையிறங்கியது. இது மனித படைப்பின் உச்சமாக பார்க்கப்படுகிறது.
அமெரிக்காவின் மிகப்பெரிய கனவு நனவானது.
இதனால் நிலவில் முதன் முதலில் தனது கால் தடத்தை பதித்த மனிதனாக நீல் ஆம்ஸ்ட்ராங் பார்க்கப்படுகிறார். அவர் சொன்ன வசனங்கள் வரலாற்றில் இடம் பெற்றவை. “மனிதனின் இந்த சிறிய கால்தடம், மனித குலத்திற்கு பெரிய தடமாகும்” என்றார்.
மனிதன் பூமியை தாண்டி வேறு ஒரு கிரகத்திற்கு சென்று அங்கு தன் காலடிகளை பதிப்பது என்பது வரலாற்றிலேயே மிகப்பெரிய விஷயமாகும். இருப்பினும் அப்பல்லோ குறித்த பல விஷயங்கள் அனைவரும் அறியாததாகவே உள்ளது.
ஒரு நிமிட அளவே எரிப்பொருள் இருந்தது
இதனால் நிலவில் முதன் முதலில் தனது கால் தடத்தை பதித்த மனிதனாக நீல் ஆம்ஸ்ட்ராங் பார்க்கப்படுகிறார். அவர் சொன்ன வசனங்கள் வரலாற்றில் இடம் பெற்றவை. “மனிதனின் இந்த சிறிய கால்தடம், மனித குலத்திற்கு பெரிய தடமாகும்” என்றார்.
மனிதன் பூமியை தாண்டி வேறு ஒரு கிரகத்திற்கு சென்று அங்கு தன் காலடிகளை பதிப்பது என்பது வரலாற்றிலேயே மிகப்பெரிய விஷயமாகும். இருப்பினும் அப்பல்லோ குறித்த பல விஷயங்கள் அனைவரும் அறியாததாகவே உள்ளது.
ஒரு நிமிட அளவே எரிப்பொருள் இருந்தது
சந்திர
தொகுதிக்குள் அப்பல்லோ 11 சென்றபோது எரிப்பொருள் பற்றாக்குறை ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த கருத்துக்கு நாசா விளக்கமளிக்கிறது. முதல் 16 கிலோ மீட்டருக்கு அதன்
எரிப்பொருளை அப்பல்லோ பயன்படுத்தவில்லை.
அப்பல்லோ
10 கிலோ மீட்டரை கணக்கில் எடுத்துக்கொண்டு தரையிரங்க முடிவு செய்யப்பட்டிருந்தது.
ஆனால் ஆம்ஸ்ட்ராங் மற்றும் பஸ் ஆல்ட்ரின் தரையிறங்க நினைத்த போது மேலும் 7 கிலோ
மீட்டருக்கான எரிப்பொருள் செலவானது.
தரையிரங்கும் இடம்
அதன்
பிறகு மற்றொரு தடையாக தரையிரங்கும் இடம் தட்டையாக இல்லாமல் பள்ளமாக இருந்தது.
இதனால் பள்ளத்தின் விளிம்பில் அவர்கள் தரையிரங்க வேண்டி இருந்தது. இதற்காக மேலும்
சில கிலோ மீட்டர்கள் அவர்கள் விண்கலத்தை நகர்த்த வேண்டி இருந்தது.
இதனால்
ஆம்ஸ்ட்ராங் சந்திர தொகுதியை சுற்றி வர முடிந்தது. விண்கலமும் பாதுக்காப்பான
முறையில் தரையிரங்கியது. ஆனால் இந்த சுழற்சிகளால் அதிகப்படியான எரிப்பொருள்கள்
தீர்ந்துபோயிருந்தது.
அடிப்படையில்
இது மிக மோசமான விஷயமாகும். அப்பல்லோ 11 விண்வெளி பயணம் தோல்வியடைந்தது என்றே பலர்
முடிவு செய்தனர். ஆம்ஸ்ட்ராங் ஒரு கடற்படை விமானியாக இருந்தவர்.
மேலும்
நாசாவின் ஏரோனாட்டிக்ஸ் தேசிய ஆலோசனை குழுவின் முன்னாள் பைலட்டாக இருந்தவர்.
இதனால் சூழ்நிலையை புரிந்துக்கொண்டு விரைவாக முடிவெடுத்தார். இதனால் அனைவரும்
காப்பாற்றப்பட்டனர்.
சில மணி நேரம்
சந்திரனில் தங்கினர்
நிலவுக்கு சென்ற அந்த குழுவினர் சில மணி நேரத்தை நிலவில் செலவிட்டனர். அப்பல்லோ 11 இல் நிலவுக்கு சென்ற வீரர்கள் ஒரு நாளுக்கும் குறைவாக சந்திரனில் இருந்தனர்.
அவர்கள்
நிலவை காட்டிலும் விண்வெளியில் அதிக நேரத்தை செலவிட்டனர். ஏனெனில் அவர்களுடைய பயண
தூரம் அதிகமாக இருந்தது. அப்பல்லோ பணி முடிந்து 8 நாட்கள் கழித்து பசிபிக்
பெருங்கடலில் தரையிரங்கியது. இரண்டு விண்வெளி வீரர்கள் சந்திரனில் இறங்கிய ஒவ்வொரு
நொடியையும் பயன்படுத்தினர்.
அமெரிக்கா கொடி!
அவர்கள்
நிலவின் மேல் மட்டத்தில் அமெரிக்க கொடியை நட்டனர். விண்வெளியில் காற்று
சேகரிக்கும் இயந்திரத்தை அமைத்தனர். அவர்கள் அங்கே நில அதிர்வு வரைப்படம் மற்றும்
லேசர் அலைகளை பிரதிபலிக்க கூடிய பதக்கங்களை விட்டு சென்றனர்.
அங்குள்ள
பாறைகள் மற்றும் தூசிகளையும் அவர்கள் சேகரித்தனர். அதில் சிறிது நேரத்தை ஒதுக்கி
அப்போதைய அமெரிக்க ஜனாதிபதியான ரிச்சர்ட் நிக்சனுடன் பேசினர்.
லேசர் அலை
பிரதிபலிப்பான்!
நிலவுக்கு
சென்று 51 ஆண்டுகளுக்கு மேலாகியும் அங்கு வைத்த லேசர் அலை பிரதிபலிப்பான்
செயல்பட்டு வருகிறது. லேசர் அலை பிரதிபலிப்பான்கள் அப்பல்லோ 24 மற்றும் அப்பல்லோ
15 லும் பயன்படுத்தப்பட்டன.
இந்த
பிரதிபலிப்பானில் சிறப்பு கண்ணாடிகள் உள்ளன. அவை ஒளியின் கதிர் அல்லது லேசர்
வெளிப்படும் திசையில் சரியாக பிரதிபலிக்கிறது. இந்த பிரதிபலிப்புகள் மூலம் நாசா
நிலவை பற்றி அதிகமாக கற்றுக்கொள்கின்றன.
இந்த
பிரதிபலிப்பான்கள் பூமியில் உள்ள பெரிய தொலைநோக்கிகளுக்கு லேசர் அலைகளை
அனுப்புகின்றன. லேசர் அலையை தொலைநோக்கியால் உட்கொள்ள முடியும்.
சந்திரனின் தூரத்தை
அளவிட...
பூமியின்
சுழற்சியின் போது எந்த நேரத்திலும் சந்திரன் இருக்கும் தூரத்தை அளவிட இந்த லேசர்
அலை பிரதிபலிப்பான் உதவுகிறது.
அதன்
மூலம் பெறப்பட்ட தகவல்கள் அனைத்தும் பூமியிலிருந்து சந்திரனின் தூரத்தை
(வருடத்திற்கு 3.8 செ.மீ) குறித்த அறிவை வளர்த்துக்கொள்ள உதவுகிறது. இது
ஐன்ஸ்டினின் சார்பியல் கோட்பாட்டை சோதிக்கவும் உதவுகிறது.
சந்திரனின்
மேற்பரப்பில் அப்பல்லோ 11 விண்கலம் விட்டு சென்ற அனைத்து அலை
பிரதிப்பலிப்பான்களிலும் தற்சமயம் ஒன்று மட்டுமே செயல்பாட்டில் உள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக