இமாச்சலப் பிரதேசத்தில் சாலையில்
நடந்து சென்ற பெண்ணுக்கு லிப்ட் கொடுப்பதாக ஏமாற்றி வெவ்வேறு இடங்களுக்கு அழைத்து சென்று
பலாத்காரம் செய்துள்ளனர்.
பேருந்திற்கு
காத்திருந்த பெண்
இமாச்சல
பிரதேச மாநிலம் காங்க்ரா மாவட்டத்தைச் சேர்ந்த 32 வயதான பெண் ஒருவர் கடந்த வியாழன்
அன்று பனோய் என்ற பகுதியில் பேருந்துக்காக காத்துக்கொண்டிருந்தார்.
லிப்ட் கொடுத்து
ஏமாற்றிய கும்பல்
அப்போது,
அவ்வழியே வந்த 7 பேர் கொண்ட கும்பல், மேற்கண்ட பெண்ணுக்கு லிப்ட் வழங்குவதாக கூறி
தங்களது வாகனத்தில் ஏற்றிக்கொண்டனர். தனக்கு உதவி செய்கிறார்களே என்று நம்பி
அவர்களுடன் புறப்பட்ட பெண்ணை, அந்த ஏழு பேரும் உரிய இடத்தில் இறக்கிவிடாமால்,
அவர்களுக்கு தெரிந்த பன்னை வீட்டுக்கு அடாவடியாக கொண்டு சென்றுள்ளனர்
மாறி மாறி பலாத்காரம்
கூச்சலிட்டாலும்
உதவிக்கு வர ஒருவர்கூட இல்லாத சூழலில், 7 பேரும் சேர்ந்து அப்பெண்ணை மாறி மாறி
பலாத்காரம் செய்துள்ளனர். அதையடுத்து, அப்பெண்ணை விட மனம் இல்லாமல்,
மெக்லியோட்கஞ்சில் உள்ள ஒரு ஹோட்டலுக்கு அழைத்து சென்று அங்கேயும் கூட்டாக
பலாத்காரம் செய்துள்ளனர்
7 பேர் கைது
காமுகர்களின்
பிடியில் இருந்து மீண்டு வந்த அப்பெண் சம்பவம் குறித்து காகள் காவல் நிலையத்தில்
புகார் அளித்ததால், வழக்கு பதிவு செய்த போலீசார் பெண்ணை வன்கொடுமை செய்த 7
பேரையும் வெவ்வேறு கிராமத்தில் இருந்து கைது செய்துள்ளனர்.
3 குழந்தைகளின் தாய்
மேலும்,
மெக்லியோட்கஞ்ச் ஹோட்டல் உரிமையாளரையும் கைது செய்து 8 பேரை நீதிமன்ற காவலில்
வைத்துள்ளனர். இதுகுறித்து காங்க்ரா டிஎஸ்பி. சுனில் ராணா கூறுகையில்,
பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு 32 வயதாகும். அவருக்கு திருமணமாகி 3 பிள்ளைகள் உள்ளனர்.
ஆனால் கணவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு கடந்த 5 வருடமாக தனியாக வசித்து
வந்துள்ளார் '' என அவர் கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக