Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வெள்ளி, 21 ஆகஸ்ட், 2020

தரமான மருந்து, கம்மி விலையில்: இ-பார்மசி சேவையில் களமிறங்கும் ரிலையன்ஸ்!


ரிலையன்ஸ் ரீடெய்ல் வென்ச்சர்ஸ் லிமிடெட்
நாளுக்கு நாள் மக்களிடையே ஆன்லைன் மருந்து ஆர்டர் தேவை அதிகரித்துக் கொண்டே வருவதால் ரிலையன்ஸ் நிறுவனம் இ-பார்மசி சேவையில் களமிறங்க உள்ளது. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் துணை நிறுவனமான ரிலையன்ஸ் ரீடெய்ல் வென்ச்சர்ஸ் லிமிடெட் நெட்மெட்சில் முதலீடு செய்துள்ளது.
ரிலையன்ஸ் ரீடெய்ல் வென்ச்சர்ஸ் லிமிடெட்
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் துணை நிறுவனமான ரிலையன்ஸ் ரீடெய்ல் வென்ச்சர்ஸ் லிமிடெட் மருந்து நிறுவனமான நெட்மெட்ஸில் சுமார் 620 கோடி ரூபாய்க்கான பெரும்பான்மையான பங்குகளை வாங்கியுள்ளது.
சுமார் ரூ.620 கோடி மதிப்பில் 60% பங்குகள்
சென்னையை சேர்ந்த நெட்மெட்ஸ் மற்றும் அதன் துணை நிறுவனங்களில் 60% பங்குகளை சுமார் ரூ.620 கோடி கொடுத்து ரிலையன்ஸ் ரீடெய்ல் வென்ச்சர்ஸ் லிமிடெட் வாங்கியுள்ளது. ரிலையன்ஸ் இ-மருத்துவ சேவாவில் களமிறங்க உள்ளது.
தாதா பார்மா டிஸ்டிரிபியூஷன் பிரைவேட் லிமிடெட்
நெட்மெட்ஸ் அதன் துணை நிறுவனமான ட்ரெசாரா ஹெல்த் பிரைவேட் லிமிடெட், நெட்மெட்ஸ் மார்க்கெட் பிளேஸ் லிமிடெட் மற்றும் தாதா பார்மா டிஸ்டிரிபியூஷன் பிரைவேட் லிமிடெட் ஆகியவற்றின் பங்குகளையும் ரிலையன்ஸ் ரீடெயல் வென்ச்சர்ஸ் லிமிடெட் வாங்கியது
இயக்குனர் ஈஷா அம்பானி கருத்து
இதுகுறித்து ரிலையன்ஸ் ரீடெய்ல் வென்ச்சரின் இயக்குனர் ஈஷா அம்பானி கூறுயதாவது, இந்த முதலீடு இந்தியாவில் உள்ள அனைவருக்கும் டிஜிட்டல் அணுகலை வழங்குவதற்கான எங்கள் உறுதிப்பாட்டுடன் இணைக்கப்பட்டுள்ளது எனவும் நெட்மெட்ஸின் முதலீடு என்பது ரிலையன்ஸ் சில்லறை விற்பனையின் நல்ல தரமான மற்றும் மலிவு சுகாதார தயாரிப்புகளை வழங்குவதே நோக்கம் என தெரிவித்தார். மேலும் நுகர்வோரின் அன்றாட அத்தியாவசிய தேவைகளை ரிலையன்ஸ் பூர்த்தி செய்வதின் நடவடிக்கைகளை உள்ளடக்கிய ஒன்று எனவும் கூறினார்
அமேசானுக்கு கடும் போட்டி
ரிலையன்ஸ் இந்த அறிவிப்பு சமீபத்தில் அமேசானுக்கு கடும் போட்டியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அமேசான் இந்தியாவில் ஆன்லைன் மருந்தகத்தை தொடங்குவதாக அறிவித்தது. அமேசான் பார்மசி என்று அழைக்கப்படும் இந்த சேவை மருந்து அடிப்படையிலான மருந்துகள், அடிப்படை சுகாதார மற்றும் பாரம்பரிய இந்திய மருந்துகளை வழங்கும் என்று நிறுவனம் அறிக்கையில் தெரிவித்தது.
அமேசான் பார்மசி ஆன்லைன் மருத்துவ கடை
அமேசான் பார்மசி ஆன்லைன் மருத்துவ கடைகளான மெடிலைஃப், நெட்மீடியஸ், டெமாசெக் மற்றும் சீக்வோயா கேபிடல் 1 எம்ஜி ஆகியவற்றுடன் இணைந்து தற்போது மருந்தக சந்தையில் உள்ளது. கடந்த மாதம், அமேசான் இந்தியாவில் 10 புதிய கிடங்குகளைத் திறக்க திட்டமிட்டுள்ளது.
இ-மருத்துவ சேவை
ரிலையன்ஸ் இ-மருத்துவ சேவை, அமேசான் ஆன்லைன் பார்மா இவைகளுக்கு இடையே கடும் போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது. ரிலையன்ஸ் இந்த அறிவிப்பின்மூலம் இந்தியாவில் ஆன்லைன் மருத்துவ சேவை ஆர்டர் தேவை அதிகரிக்கும் என கூறப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக