ஏர்டெல்
நிறுவனம் தொடர்ந்து புதிய சலுகைகள் மற்றும் திட்டங்களை அறிவித்த வண்ணம் உள்ளது
என்றுதான் கூறவேண்டும். அதன்படி இந்நிறுவனம் தேர்வு செய்யப்பட்ட ஏர்டெல் டிஜிட்டல்
டிவி சந்தாதாரர்களுக்கு ஒரு வருடத்திற்கான எக்ஸ்டிரீம் பிரீமியம் சந்தாவை இலவசமாக
வழங்கி வருவதாக தகவல் வெளிவந்துள்ளது.
மேலும்
தேர்வு செய்யப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு ஏர்டெல் குறுந்தகவல் அனுப்பி தகவல்
தெரிவித்து வருவதாக கூறப்படுகிறது. பின்பு எக்ஸ்டிரீம் சந்தா இலவமாக வழங்கப்பட்ட
பயனர்கள் சிலர் இந்த சலுகை பற்றிய தகவலை ட்விட்டரில் பகிர்ந்துள்ளனர் என்பது
குறிப்பிடத்தக்கது.
ஏர்டெல்
நிறுவனம் சார்பில் அனுப்பப்பட்டுள்ள குறுந்தகவலில் எக்ஸ்ட்ரீம் பிரீமியம் சந்தா
365நாட்களுக்கு ஆக்டிவேட் செய்யப்பட்டு உள்ளதாக குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
மேலும் ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் சந்தாவில் பயனர்களுக்கு ஆயிரத்திற்கு மேற்பட்ட
திரைப்படங்கள் தொலைகாட்சி நிகழ்ச்சிகள் மற்றும் ஏர்டெல் எக்ஸ்டிரீம் ஸ்மார்ட்
ஸ்டிக் மூலம் பல்வேறு தரவுகள் வழங்கப்படுகின்றன.
இந்த
அட்டகாச சலுகை எக்ஸ்டிரீம் பாக்ஸ் அல்லது ஸ்மார்ட் ஸ்டிக் இல்லாத பயனர்களுக்கும்
வழங்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. அன்மையில் ஏர்டெல் நிறுவனம் புதிய
எக்ஸ்டிரீம் ஃபைபர் ஹோம் பிராட்பேண்ட் சேவையை பெறும் வாடிக்கையாளர்களுக்கு ஆயிரம்
ஜிபி இலவச டேட்டா வழங்குவதாக அறிவித்தது.
மேலும்
இந்த சலுகை தேர்வு செய்யப்பட்ட எக்ஸ்டிரீம் ஃபைபர் சலுகைகளில் குறுகிய
காலக்கட்டத்திற்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பின்பு இந்த இலவச டேட்டா
அன்லிமிட்டெட் டேட்டா வழங்கும் சலுகைகள் மட்டுமின்றி பிரீபெயிட் சலுகைகளிலும்
வழங்கப்படுகிறது.
குறிப்பாக
ஆயிரம் ஜிபி இலவச டேட்டா ஆறு மாதம் வேலிடிட்டி கொண்டது ஆகும். பின்பு இந்த
சலுகையின் விலை ரூ.799 முதல் துவங்குகிறது, பின்பு இதில் 12மாதங்களுக்கு அமேசான்
பிரைம் சந்தா, ஏர்டெல் எக்ஸ்டிரீம் மற்றும் விண்க் மியூசிக் சேவை வழங்கப்படுகிறது
என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக