ஜியோனி கே 3 ப்ரோ ஸ்மார்ட்போன் ஹீலியோ பி60 சிப்செட் மற்றும் 4,000 எம்ஏஎச் பேட்டரி உள்ளிட்ட பல்வேறு அம்சங்களோடு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
ஜியோனி கே 3 ப்ரோ என்ற புதிய மாடல்
ஸ்மார்ட்போனை சீனாவில் அறிமுகம் செய்ய உள்ளதாக நிறுவனம் அறிவித்துள்ளது. ஜியோனி ஸ்மார்ட்போனானது 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் விருப்பம் மற்றும் 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி சேமிப்பு விருப்பத்தோடு நிறுவனம் அறிமுகம் செய்ய உள்ளது.
6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி சேமிப்பு
6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி சேமிப்பின் விலை 699 யுவானாக உள்ளது. இந்திய விலை மதிப்பின்படி தோராயமாக ரூ.7500 எனவும். 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி சேமிப்பின் விலை 799 யுவான் அதாவது இந்திய விலை மதிப்புப்படி தோராயமாக ரூ.8600 எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இரண்டு வண்ண விருப்பங்களோடு
ஜியோனி கே 3 ப்ரோ ஜேட் கிரீன் மற்றும் பேர்ல் ஒயிட் உள்ளிட்ட இரண்டு வண்ண விருப்பங்களோடு வருகிறது. ஜியோனி ஸ்மார்ட்போனானது 6.53 இன்ச் ஹெச்டி ப்ளஸ் வாட்டர்டிராப் நாட்ச் டிஸ்ப்ளே அம்சத்தோடு வருகிறது.
ஆக்டோ கோர் மீடியாடெக் ஹீலியோ பி60 செயலி
மேலும் இதில் 19: 9 விகிதம் 90 சதவீத ஸ்க்ரீன் டூ பாடி இடைவெளி உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனானது மாலி ஜி 72 எம்பி 3 ஜிபி கொண்ட ஆக்டோ கோர் மீடியாடெக் ஹீலியோ பி60 செயலி உள்ளிட்ட ஆதரவோடு இயக்கப்படுகிறது.
16 மெகாபிக்சல் பிரதான கேமரா
இதில் மெமரி விரிவாக்கத்திற்கு மைக்ரோ எஸ்டிகார்டு ஸ்லாட் வசதியும் உள்ளது. அதோடு 16 மெகாபிக்சல் பிரதான கேமரா வசதியோடு டிரிபிள் ரியர் கேமரா வடிவமைப்போடு வருகிறது. இதில் பிற இரண்டு கேமராக்களின் விவரங்கள் எதுவும் தெரியவில்லை. செல்பி கேமரா அம்சத்துக்கென 13 மெகாபிக்சல் ஷூட்டர் கேமரா வசதி உள்ளது.
ஆண்ட்ராய்டு 9.0
இந்த ஸ்மார்ட்போனானது ஆண்ட்ராய்டு 9.0 பை மூலம் இயக்கப்படுகிறது. இதில் 4000 எம்ஏஹெச் பேட்டரி அம்சத்தோடு, 10 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு என பல்வேறு அம்சங்கள் இதில் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனின் பின்புறத்தில் கைரேகை சென்சார் உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
யூஎஸ்பி சி டைப் போர்ட்
இந்த ஸ்மார்ட்போனில் கூடுதல் ஆதரவாக 4 ஜி எல்டிஇ, வைஃபை, ப்ளூடூத் 4.0, ஜிபிஎஸ், யூஎஸ்பி சி டைப் போர்ட், 3.5 மிமீ ஆடியோ ஜாக் ஆதரவு ஆகிய அம்சங்களும் உள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக