வேற்றுகிரகவாசிகளின்
இருப்பு பற்றி இன்னும் உலகம் முழுவதும் தொடர்ந்து விவாதிக்கப்பட்டு தான் வருகிறது.
ஆனால், அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு சதி கோட்பாட்டாளர், ஏலியன்கள் இருப்பதற்கான
ஆதாரம் தன்னிடம் இருப்பதாகக் கூறி சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்த
புகைப்படங்கள் அனைத்தும் கூகிள் எர்த் சாட்டிலைட் புகைப்படங்கள் என்பது
குறிப்பிடத்தக்கது.
ராட்சஸ ஏலியன் உருவம்
கூகிள்
எர்த் பயன்படுத்தி அண்டார்டிகாவில் சரிவுகளில் காணப்படும் ஒரு அன்னிய ராட்சத
உருவத்தை அவர் அடையாளம் கண்டுள்ளார். கூகிள் எர்த் புகைப்படங்களை அவர் ஆதாரமாக
தற்பொழுது வலைத்தளங்களில் பதிவு செய்துள்ளார். இவர் கண்டுபிடித்துள்ள ஏலியன்
உருவம் உண்மையில் இராட்சஸ தோற்றம் கொண்டது என்று அதன் அருகே காணப்படும் ரகசிய
குகையின் வாசலையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதன் உயரம் எவ்வளவு தெரியுமா?
ஏலியன்
ஹண்டர் என்று அழைக்கப்படும் ஸ்காட் சி வேரிங் என்பவர் தான் இந்த நம்பமுடியாத தகவலை
தற்பொழுது வெளியிட்டுள்ளார். அவரின் கருத்துப்படி இந்த ஏலியன் உருவம் சுமார் 20
மீட்டர் உயரம் கொண்டது என்று கூறியுள்ளார். அதன் அருகே காணப்படும் குகையின் வாசல்
சுமார் 22 மீட்டர் உயரம் கொண்டது என்றும் அவர் கூறியுள்ளார். அந்த உருவத்தின்
உயரம் இதுதான் என்பதை நிரூபிக்கவும் அவரிடம் ஆதாரம் இருப்பதாகக் கூறியுள்ளார்.
உயரத்திற்கான ஆதாரம்
Mr
Warning என்ற தனது வலைப்பதிவில் ET தரவுத்தளத்தில் ஸ்காட் சி வேரிங் எழுதியுள்ளது,
"நான் இன்று அண்டார்டிகாவில் உள்ள ஒரு பகுதியில் மாபெரும் உருவத்தைக்
கண்டேன், அது ஒரு மாபெரும் நுழைவாயிலிலிருந்த ஒரு குகை திறப்பிற்கு அருகில்
நின்றது" கூகிள் ரூலர் மூலம் இந்த உருவத்தின் உயரம் சுமார் 20 மீட்டர்
என்பதும், குகையின் நுழைவாயில் 22 மீட்டர் உயரம் என்பதும்
உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று அவர் கூறியுள்ளார்.
ரஷ்யாவில்
கண்டுபிடிக்கப்பட்ட உருவங்கள்
இந்த
அசாதாரணமான உயரத்தில் வேறு கிரகவாசிகளின் அடையாளங்கள் கண்டுபிடிக்கப்படுவது இது
முதல் முறை அல்ல, இதற்கு முன்பு 4-5 மீட்டர் உயரமுள்ள வேற்றுகிரகவாசிகளின்
அடையாளங்கள் ரஷ்யாவிலிருந்து வெளிவந்தன, மேலும் மனிதனைப் போன்ற உயிரினத்தின் பெரிய
மண்டை ஓட்டுடன் கூடிய மாபெரும் எலும்புக்கூடுகளும் பல முறை வரலாற்றில்
கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதைவிட உறுதியான ஒரு
ஆதாரம் இருக்க முடியாது
ஆனால்,
தற்பொழுது வெளியாகியுள்ள இந்த புகைப்படம் செயற்கைக்கோளினால் எடுக்கப்பட்டது என்பது
குறிப்பிடத்தக்கது. செயற்கைக்கோள் புகைப்படம் என்பதால் இதில் போலியான தகவல்கள்
இருப்பதற்குச் சாத்தியம் இல்லை என்று ஸ்காட் கூறியுள்ளார். செயற்கைக்கோள் என்பது
எதைப்பற்றியும் கவலைப் படாமல் இருப்பதை இருந்தபடியே காட்டக்கூடியது, இதைவிட ஒரு
உறுதியான ஆதாரம் இருக்க முடியாது என்று அவர் கூறியுள்ளார்.
நாசா சொன்ன பதில்
இருப்பினும்,
இதை பற்றி நாசாவிடம் கேட்டபொழுது, கட்டமைப்பு மற்றும் பிற ஒத்த கண்டுபிடிப்புகள்
அனைத்தும் பரேடோலியாவின்(pareidolia) விளைவுகள் மட்டுமே என்று நாசா கூறியுள்ளது.
பரேடோலியா விளைவு என்பது, அவை இல்லாத ஒரு பொருளை இருக்கிறது என்று நம்ப வைக்கும்
விளைவாகும். குறிப்பாக ஒரு இடத்தில் பார்க்கப்படும் பொருள் அல்லது வடிவங்களை நாம்
பார்க்க நினைக்கும் பொருளாகவே நமது மூளை கண்களை ஏமாற்றும் ஒரு உளவியல்
நிகழ்வாகும்.
நாசா மழுப்புகிறதா?
இதன்
பொருள் புகைப்படத்தில் உள்ள 'மாபெரும் உருவம்' மற்றும் 'குகையின் வாசல்' என்பது
பனியின் பாறைகளின் அடையாளம் மட்டுமே என்று நாசா பதிலளித்துள்ளது. இதற்கு நாசா
மழுப்புகிறது என்று ஸ்காட் தனது பக்கத்தில் கூறியுள்ளார். நாசா ஒப்புக் கொண்டால்,
இதுபோன்ற அதிர்ச்சியூட்டும் அன்னிய வெளிப்பாட்டைச் சமாளிக்கும் வலிமை
மனிதக்குலத்திற்கு இருப்பதாகவும் ஸ்காட் தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக