ஓரு தடவை முல்லா தெருவழியே நடந்து போகும் போது
சிலர் ஒரு வீட்டின் மேற்க்கூரையைப் பழுதுபார்த்துக் கொண்டிருந்தார்கள். திடீரென
ஒருவன் கால் தவறிக் கீழே நடந்துப் போய்க் கொண்டிருந்த முல்லாவின் மீது வந்து
விழுந்தான். விழுந்தவனுக்கு எந்தவித அடியும் படவில்லை. ஆனால் முல்லாவுக்கு மிகவும்
படுகாயம் ஏற்பட்டது.
உடனே முல்லாவை அருகிலிருந்த மக்கள்
மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்தனர். முல்லாவுக்கு பலமாக அடிபட்டு
மருத்துவமனையில் இருக்கிறார் என்ற செய்தியறிந்த நண்பர்களும் பொதுமக்களும் சென்று
முல்லாவைச் சந்தித்து ஆறுதல் கூறினர்.
இது எப்படி நடந்தது? என்று
கூட்டத்திலிருந்த ஒருவர் கவலையோடு கேட்டார். எல்லாம் உலக நியதிப்படிதான் நடந்தது.
உலகத்தில் பாவம் செய்கிறவன் தப்பித்து கொள்கிறான். ஆனால் நிரபராதி பாவத்தின்
தண்டணையை அனுபவிக்கிறான். அது மாதிரி தான் இதுவும். நான் கூரை மேலிருந்து
விழவில்லை. என் மேல் விழுந்தவனுக்குக் சிறுக்காயம் கூட இல்லை. கூரை மேலிருந்து
விழாத எனக்கு படுகாயம் ஏற்பட்டது என்று சிரித்துக் கொண்டே பதில் சொன்னார் முல்லா.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக