Turn Your Memories into Beautiful Gifts 🎁 – Order Now

Click here to join our WhatsApp channel

வெள்ளி, 28 ஆகஸ்ட், 2020

முட்டாள் காவலர்கள்

 முல்லா நாட்டிற்கு பக்கத்து நாட்டில், அந்த நாட்டின் எல்லைக்குள் கோழிகளைக் கொண்டு சென்று வியாபாரம் செய்யலாம். ஆனால் கோழி முட்டைகளை கொண்டு சென்று வியாபாரம் செய்யக்கூடாது என்று ஒரு சட்டம் இருந்தது. இதைப்பற்றி நன்கு அறிந்திருந்தும்கூட முல்லா மட்டும் யாருக்கும் தெரியாமல் கோழி முட்டைகளைக் எடுத்துச்சென்று வியாபாரம் செய்து வந்தார்.

ஒரு நாள் முல்லா கோழி முட்டைக் கூடையுடன் அந்த நாட்டுக்குள் பிரவேசித்தபோது இரண்டு காவலர்கள் அவரைப் பிடித்துக் கூடைக்குள் என்ன இருக்கிறது? என்று கேட்டனர். கோழிக்குஞ்சுகள் என்றார் முல்லா.

காவலர்கள் கூடையைத் திறந்து பார்த்தப்போது கூடைக்குள் ஏராளமான முட்டைகள் இருந்தது. முல்லாவிடம் ஒரு காவலன் என்ன கூடைக்குள் கோழிக்குஞ்சுகள் இருப்பதாக சொன்னீர்கள்?. ஆனால் கூடைக்குள் கோழி முட்டைகள் இருக்கின்றன என்று கேட்டான்.

நீங்கள் இருவரும் சரியான முட்டாள்களாக இருக்கிறீர்கள். காவலர்களிடம் கோழிக் குஞ்சுகள் எங்கிருந்து வருகின்றன? என்று முல்லா கேட்டார். கோழி முட்டைகளுக்குள் இருந்து வருகின்றது என்றனர். அப்படியானால் முட்டைகளுக்குள் கோழிக்குஞ்சுகள் இருக்கின்றன என்று தானே அர்த்தம் என்று கேட்டார் முல்லா. ஆமாம் என்றார்கள். இதைத்தான் நானும் சொன்னேன்.

ஆக நான் கோழிமுட்டைகளுக்குள் உள்ள குஞ்சுகளைத் தான் எடுத்துச் செல்லுகிறேன். ஆகவே இது சட்டப்படி எப்படிக் குற்றமாகும் என்று முல்லா வாதிட்டார். அந்த முட்டாள் காவலர்கள் முல்லாவுக்கு ஒரு கும்பிடு போட்டு நாட்டுக்குள் செல்ல அனுமதித்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!