Turn Your Memories into Beautiful Gifts 🎁 – Order Now

Click here to join our WhatsApp channel

திங்கள், 3 ஆகஸ்ட், 2020

கனவில் வந்த மாமியார், குழந்தையை கொலை செய்த தாய்..! திருவண்ணாமலை பரபரப்பு...


திருவண்ணாமலை அருகே மாமியார் கனவில் வந்து அழைத்ததால் பெண் குழந்தையை கொலை செய்துவிட்டு தானும் தற்கொலைக்கு முயன்ற தாயின் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்சிறுப்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் கலையரசன். இவரது மனைவி சுகன்யா. இந்த தம்பதிக்கு 4 வயதில் நிவேதா என்ற மகள் உள்ளார். கலையரசனின் தந்தை, தாய் இருவரும் உடல்நிலை பாதிக்கப்பட்டு கடந்த ஓராண்டுக்கு முன்பு இறந்துவிட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு மூணு வீட்டில் கறிசோறு சமைக்க சொல்லி விட்டு வாழை இலை எடுத்து வர சென்றுள்ளார் கலையரசன். இந்நிலையில் கலையரசன் வீட்டுக்கு வந்தபோது, மனைவியும், மக்களும் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் உயிருக்கு போராடுவதை கண்டு பதறி போயுள்ளார்.

அதனையடுத்து, ஆம்புலன்சுக்கு போன் செய்ததையடுத்து இருவரது உடலும் திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

ஆனால் நிவேதா ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். மேலும், ஆபத்தான நிலையில் இருந்த சுகன்யாவை மேல் சிகிச்சைக்காக சென்னை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல பரிந்துரை செய்துள்ளனர். தற்போது சென்னையில் சிகிச்சை பெற்று வரும் சுகன்யாவிடம் போலீசார் வாக்குமூலம் பெற்றபோது அதிர்ச்சியூட்டும் தகவல் வெளியானது.

அதாவது, இறந்துபோன மாமனார் மற்றும் மாமியார் அடிக்கடி சுகன்யாவின் கனவில் வந்து, தங்களுடன் வந்துவிடுமாறு கூறியதால், தானும் கழுத்தை அறுத்துக்கொண்டு, மகளின் கழுத்தையும் சுகன்யா அறுத்ததாக கூறினார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் சுகன்யாவிடம் மேற்படி விசாரணை நடத்தி வருகின்றனர். கனவில் வந்த உறவினர்கள் தன்னை அழைத்ததாக கூறி, பெற்ற மகளின் கழுத்தை கத்தியால் அறுத்து கொலை செய்த தாயின் செயல் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!