சென்னை அயனாவரம் பகுதியில்
நின்றுகொண்டிருந்த சூப்பர் மார்க்கெட் உரிமையாளரை முகக்கவசம் அணிந்து வந்த
அடையாளம் தெரியாத நபர் அரிவாளால் வெட்டும் காட்சிகள் சிசிடிவியில் பதிவாகியுள்ளது.
சென்னை அயனாவரம் பகுதியில் நின்று
தொலைபேசியில் பேசிக்கொண்டிருந்த சூப்பர் மார்க்கெட் ஓனரை முகக்கவசம் அணிந்து
கையில் அரிவாளுடன் வந்த அடையாளம் தெரியாத நபர் வெட்டியுள்ளார். அருகில் நின்ற
இளைஞர் ஓடி வந்து காக்கவே சூப்பர் மார்க்கெட் ஓனர் தலையில் அரிவாள் வெட்டுடன்
உயிர் பிழைத்துள்ளார்.
இந்நிலையில், வந்தவர் குறைந்த வயதுடைய
இளைஞர் எனவும், அவர் தனியாக வரவில்லை கூட இருவர் வந்துள்ளதாகவும் விசாரணையில்
தெரியவந்துள்ளது. அவர்கள் வந்த வண்டியின் நம்பரை வைத்து மர்ம நபர்களை தேடி வருவதாக
போலீசார் கூறியுள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக