Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

புதன், 12 ஆகஸ்ட், 2020

இந்தியாவின் மிகசிறந்த ராஜதந்திரியான சாணக்கியர் வஞ்சகத்தால் எப்படி கொல்லப்பட்டார் தெரியுமா?


Unsolved Mysteries of Chanakya Death

பண்டைய இந்தியாவின் மிகசிறந்த ஆளுமைகளில் ஒருவராக விளங்கியவர் சாணக்கியர். அவரின் இராஜதந்திரங்களும், பொருளாதார கொள்கைகளும், அறிவுரைகளும் இன்றும் மக்களால் நினைவுகூற படுபவையாக உள்ளது. இவரின் அர்த்தசாஸ்திரமும், சாணக்கிய நீதியும் இவரின் புகழை எப்போதும் குறையாமல் வைத்திருக்கும் நூல்களாகும்.
தனது புத்திக்கூர்மையால் தெருவில் வசித்த சிறுவன் ஒருவனை மன்னராக மாற்றி மாபெரும் சாம்ராஜ்ஜியத்தையே உருவாக்கினார். பல பெருமைகளுக்கு சொந்தக்காரரான இவரின் மரணம் இன்றும் மர்மங்கள் நிறைந்ததாகவே இருக்கிறது. எவ்வளவோ முயற்சித்தும் அவரின் மரணம் பற்றிய ரகசியம் இன்னும் வெளிவரவில்லை. அவரின் மரணம் எப்படி நடந்திருக்கலாம் என்று இருவேறு விதமான கருத்துக்கள் நிலவுகிறது. அவை என்னென்ன என்று இந்த பதிவில் பார்க்கலாம்.
சாணக்கியரின் மரணம்
சாணக்கியரின் மரணத்தில் இரண்டு நிலைப்பாடுகள் உள்ளன, ஒன்று அவர் சாப்பிடாமல் பட்டினி கிடந்து இறந்ததாக கூறியது, மற்றொன்று அவரைச் சுற்றி பிணைக்கப்பட்ட ஒரு புத்திசாலித்தனமான சதி மூலம் கொல்லப்பட்டதாகக் கூறுகிறது. இந்த இரண்டு நிலைப்பாடுகளுமே அவரது பரிதாபமான விதியுடன் இணைக்கப்பட்டது.
சாணக்கியரின் வைராக்கியம்
நந்ததாஸின் அரசவையில் ஏற்பட்ட அவமானத்திற்கு பழிவாங்குவதற்காக தெருவில் சுற்றி திரிந்த சந்திர குப்தரை பெரிய பேரரசின் மன்னராக்கினார். சந்திர குப்தா மௌரியர் சாணக்கியரின் திறமையான வழிகாட்டுதலின் கீழ் ஒரு சிறந்த பேரரசர் மற்றும் தேசத்தைக் கட்டியெழுப்பவர் என்பதை நிரூபித்தார்.சந்திர குப்தருக்கு பிறகு அவரின் மகன் பிந்துசாரர் அரியணையில் அமர்ந்தார், சந்திர குப்தர் தனது கடைசி நாட்களில் சந்நியாசியாக வாழ்ந்தார்.
சதித்திட்டம்
சாணக்கியர் பிந்துசாரரின் தலைமை ஆலோசகராக தொடர்ந்தார். பிந்துசாரருடன் சாணக்கியருக்கு இருந்த உறவை சகித்துக் கொள்ள முடியாமல், அவருக்கும் ஆட்சியாளருக்கும் இடையே பகைமையை ஏற்படுத்த ஒரு பயங்கரமான சதி தீட்டப்பட்டது. இந்த சதி திட்டத்திற்கு மூளையாக இருந்தவர் பிந்துசாரரின் அமைச்சர் சுபந்து. சாணக்கியர்தான் அவரின் தாயை தந்திரமாக கொலை செய்தார் என்று பிந்துசாரரை நம்ப வைத்தார். இது அவர்கள் உறவில் விரிசலை ஏற்படுத்தியது.
பட்டினி மரணம்
தான் மிகவும் நேசித்த பிந்துசாரரின் புறக்கணிப்பை சாணக்கியாரால் சகித்துக் கொள்ள முடியவில்லை. எனவே, அவர் அரண்மனையை விட்டு வெளியேறி, இறக்கும் வரை பட்டினி கிடந்தார். இந்த நேரத்தில், பிந்துசாராவின் தாயார் துர்தாவுடன் இருந்த ஒரு செவிலியர், ராணியின் மரணத்தின் பின்னணியில் உள்ள மர்மத்தை பிந்துசாரரிடம் கூறி சாணக்கியரை குற்ற உணர்ச்சியிலிருந்து காப்பாற்றினார்.
உணவில் விஷம்
பிந்துசாரரின் தந்தை சந்திர குப்தா அரியணையில் இருந்தபோது, சாணக்கியர் அவரது எதிரிகளால் அரசருக்கு ஆபத்து வரக்கூடாது என்பதற்காக தினந்தோறும் அவரின் உணவில் சிறிதளவு விஷத்தை கலந்து வந்தார். இதன்மூலம் அவரின் எதிரிகள் விஷம் வைத்தாலும் அரசரின் நோயெதிர்ப்பு சக்தி அவரை காப்பாற்றும் என்று அவர் இதனை வழக்கமாக வைத்திருந்தார். இது தெரியாமல், ராணி கர்ப்பமாக இருந்தபோது சந்திர குப்தாவுக்கு ஒதுக்கப்பட்ட உணவை எடுத்துக் கொண்டார்.
பிந்துசாரரின் பிறப்பு
இதனை தெரிந்து கொண்ட சாணக்கியர், சிம்மாசனத்தின் வாரிசை காப்பாற்ற எண்ணினார். எனவே விஷத்தில் இருந்து வாரிசை காப்பாற்ற ராணியின் வயிறை கிழித்தார். விஷத்தில் இருந்து காப்பாற்றப்பட்டதால்தான் அவருக்கு பிந்துசாரர் என்று பெயர் வைக்கப்பட்டது. இந்த முயற்சியில் மகாராணி இறந்தார். இறுதியில், சாணக்யாவின் இந்த செயல் பேரரசின் மீதான தனது கடமையைப் பின்பற்றியதுடன், பேரரசின் ராஜாவாக இருந்த பிந்துசாராவைக் காப்பாற்றுவதற்கான ஒரு நடவடிக்கையாகவும் இருந்தது.
சாணக்கியரின் மரணம்
பிந்துசாரர் இந்த உண்மையை தெரிந்து கொண்டதும், தான் செய்த மிகப்பெரிய தவறை உணர்ந்தார். இருப்பினும், அவரை சமாதானப்படுத்தி மீண்டும் அரசவைக்கு அழைத்து வர முயற்சித்த போதிலும், சாணக்கியர் அதை செய்ய மறுத்து, இறக்கும் வரை தொடர்ந்து பட்டினி கிடந்தார். மற்றொரு கருத்து என்னவெனில் சுபந்து சாணக்கியரை நயவஞ்சகமாக உயிருடன் எரித்ததாக கூறப்படுகிறது. சுபந்துவின் தீய திட்டத்தை அறிந்து கொண்ட பிந்துசாரர் அவரை கொன்றதாகக் கூறப்படுகிறது. இருப்பினும் சாணக்கியரின் மரணத்தை சுற்றிய மர்மம் இன்னும் முழுமையாக விலகாமல்தான் உள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக