அமெரிக்கா
சீனா பிரச்சனை என்பது விட்ட குறை தொட்டகுறையாக தொடர்ந்து கொண்டே வருகிறது. தொடர்ந்து
இவ்விரு நாடுகளுக்கு இடையேயான பிரச்சனை என்பது அதிகரித்துக் கொண்டே வருகிறது.
சில நடவடிக்கைகள் சீனாவுக்கு பாதகமாக
கருதப்பட்டாலும், டிரம்பின் இந்த நடவடிக்கையால் அமெரிக்காவுக்கும் சில பாதகமான
விஷயங்களும், உள்ளது.
சீன நிறுவனத்தின் டிக்டாக், வீசாட்
ஆகிய செல்போன் செயலிகள் அமெரிக்காவின் பாதுகாப்பு மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு
அச்சுறுத்தலாக இருப்பதாகக் குறிப்பிட்டு தடை விதித்து அதிபர் டொனால்ட் ட்ரம்ப்
அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.
இந்தியாவிலும்
தடை
தேசப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்
இருப்பதாகக் கூறி சீனாவின் டிக்டாக், வீசாட், ஹலோ உள்ளிட்ட சுமார் 59 செயலிகளுக்கு
இந்தியா தடை விதித்திருந்தது. இந்தியாவின் இந்த அதிரடியான நடவடிக்கையானது
பாராட்டத்தக்க விஷயம் என்றும் அமெரிக்கா கூறியது. இந்த நிலையில், டிக்டாக்
உள்ளிட்ட சில சீன செயலிகளால் தேசப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் காரணமாக
அமெரிக்காவிலும் டிக்டாக்கிற்கு விரைவில் தடை விதிக்கப்படும் என அமெரிக்க அதிபர்
டிரம்ப் கடந்த சில வாரங்களுக்கு முன்பு அறிவித்திருந்தார்.
சீன
செயலிகளுக்கு தடை
இந்த நிலையில் சீன நிறுவனங்களின்
செயலிகளான டிக்டாக், வீசாட் ஆகியவற்றை தடை விதித்து டிரம்ப் உத்தரவிட்டார். இது
அடுத்த 45 நாட்களில் இருந்து நடைமுறைக்கு வரும் எனவும் தெரிவித்திருந்தார்.
இது குறித்து டிரம்ப் பிறப்பித்த
உத்தரவு, சீன நிறுவனங்கள் உருவாக்கிய செல்போன் செயலிகள் அமெரிக்காவில் பரந்து
கிடக்கின்றன.
அமெரிக்க
மக்களுக்கு பாதுகாப்பில்லை
சீனாவின் பைட்டான்ஸ் நிறுவனம்
உருவாக்கிய டிக்டாக் செயலி, அதைப் பயன்படுத்துவோரின் விவரங்களை எடுத்துக்
கொள்கிறது. இதன் மூலம் அமெரிக்க மக்களின் தனிப்பட்ட விவரங்களை சீன அறிந்து கொள்ள
முடியும். இதன் மூலம் அமெரிக்க மக்களின், அதிகாரிகளின், ஒப்பந்ததாரர்களின்
தனிப்பட்ட விவரங்களை அறியவும், இதன் மூலம் அவர்கள் அமெரிக்க மக்களை மிரட்ட
முடியும் என்றும் டிக்டாக் செயலிக்கு தடைவிதித்தார் டிரம்ப்.
டிக்டாக்
வீசாட் தடை
அது மட்டும் அல்ல இந்த தடை உத்தரவை
அமல்படுத்த வர்த்தகத்துறை அமைச்சகத்துக்கு அதிகாரம் அளிக்கிறேன். அதேபோல சீனாவின்
டென்சென்ட் ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் வீசாட் சமூக வலைத்தளம், மற்றும் பணம்
அனுப்பும் தளத்தையும் தடை செய்ய உத்தரவிட்டுள்ளேன். டிக்டாக், வீசாட் இரு
செயலிகளும் பயன்பாட்டாளர்களின் விவரங்களை தானாகவே எடுத்துக்கொள்ளக் கூடியவை.
ஆப்பிளுக்கு
பெருத்த அடி
அதுமட்டும் அல்ல அமெரிக்கர்கர்களின்
தனிப்பட்ட விவரங்களை அறிய சீன கம்யூனிஸ்ட் கட்சிக்கு உதவுபவை. இந்த இரு
உத்தரவுகளும் அடுத்த 45 நாட்களில் இருந்து நடைமுறைக்கு வரும் என்றும் டிரம்ப்
உத்தரவில் கூறப்பட்டது. இதற்கிடையில் டிரம்பின் அதிரடி உத்தரவால் அமெரிக்காவின்
முன்னணி ஸ்மார்ட்போன் நிறுவனமான ஆப்பிள் இன்க் நிறுவனத்தின் விற்பனையானது,
சீனாவில் பெருத்த அடி வாங்கலாம் என்றும் கூறப்படுகிறது.
வீசாட்டில் பல வசதிகள்
ஏனெனில் இந்த தடையானது சில
பரிவர்த்தனைகளை தடை செய்யும். ஆப்பிள் நிறுவனம் அதன் ஆப் ஸ்டோர் மூலம் வீசாட்டினை
தடை செய்யும். சீனாவில் வீசாட் டிஜிட்டல் லைஃபின் மையாக உள்ளது. இது பல
வாடிக்கையாளர்கள் ஷாப்பிங் செய்ய வசதியாக உள்ளது. பண பரிவர்த்தனை மற்றும் ஈ
மெயில், வலைதளம், அனைத்து வகையான இணைய பயன்பாடு உள்ளிட்ட தகவல்களுக்காக பில்லியன்
கணக்கான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
ஐபோன் வாங்குவதனை தவிர்க்கலாம்
அமெரிக்கா அதிபர் டிரம்பின் இந்த
நடவடிக்கை சீனாவிலும் ஆசியாவின் சில பகுதிகளும், ஐபோன் நுகர்வோர் அதனை வாங்குவதனை தவிர்க்கலாம்.
இது குறித்த ஒரு ஆய்வறிக்கையில் 20 பேரில் ஒருவர் அதனை வேண்டாம் என தவிர்க்கலாம்
என வாக்களித்துள்ளனர். உலக நாடு முழுவதும் சீனா தனது ஸ்மார்ட் சந்தையினை
விரிவுபடுத்தியிருந்தாலும், சீனாவின் ஸ்மார்ட்போன் சந்தையில் ஆப்பிள் 20%
பங்களிக்கிறது.
ஐபோனுக்கு
சற்று பின்னடைவு
ஆக அமெரிக்காவின் இந்த அதிரடியான
நடவடிக்கையானது, ஐபோனுக்கு நிச்சயம் சற்று பின்னடைவை கொடுக்கும் என்றும்
எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் ஆப்பிளின் பங்கு விலையானது கடந்த வெள்ளிக்கிழமையன்று
2.55% வீழ்ச்சி கண்டு, 444.45 டாலர்களாக சரிந்துள்ளது. கூகுளின் ஆப்
ஸ்டோரிலிருந்து சீன ஆப்கள் தடை செய்யப்பட்டிருந்தாலும், மற்ற நாடுகளில் இந்த
ஆப்பினை பெற மாற்று வழிகள் உள்ளன.
ஆப்பிள் நிறுவனத்திற்கு பாதிப்பு
டிரம்பின் இந்த தடை உத்தரவுக்கு சீனா
பதிலடி கொடுக்கக்கூடும். இதன் காரணமாக ஆப்பிள் நிறுவனம் பாதிக்கப்படக்கூடும்.
மேலும் ஆப்பிள் நிறுவனத்தின் பெரும்பாலான உதிரி பாகங்கள் சீனாவிலேயே
தயாரிக்கப்படுகின்றன. பல வகையிலும் அமெரிக்கா சீனா பிரச்சனையானது தொடர்ந்து வரும்
நிலையில், தற்போது சாப்ட்வேர் மூலமாக மீண்டும் விஸ்வரூபம் எடுக்க தொடங்கியுள்ளது.
ஹூவாய்க்கு சாதகமாக அமையக்கூடும்?
ஆக டிரம்பின் இந்த தடையானது
நீடிக்கும் பட்சத்தில் அது ஆப்பிள் நிறுவனத்திற்கு பெரும் பிரச்சனையாகவே
அமையக்கூடும். இதனால் ஐபோன் வாங்கும் சீனா நுகர்வோர் சீனா ஸ்மார்ட்போன் ஆன ஹூவாயின்
பக்கம் திரும்பலாம். அது எந்த சீனா நிறுவனத்தினை தடை செய்ய டிரம்ப் கூறினாரோ? அந்த
நிறுவனத்திற்கே நல்ல விஷயமாகவும் அமையும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக