இந்தியாவில் கொரோனா பாதிப்புகள் 22
லட்சத்தை தாண்டியுள்ள நிலையில் குணமடைபவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக புள்ளி விவரங்கள்
தெரிவிக்கின்றன.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 22 லட்சத்தை தாண்டியிருந்தாலும் குணமடைபவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும், இறப்பு எண்ணிக்கை குறைந்து வருவதாகவும் சுகாதார துறை அறிக்கை மூலம் தெரிய வந்துள்ளது.
கடந்த 24 மணிநேரத்தில் 53,601 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மொத்த பாதிப்பு 22,68,676 ஆக உள்ளது. மேலும் கடந்த 24 மணி நேரத்தில் 871 பேர் உயிரிழந்துள்ள நிலையில் பலி எண்ணிக்கை 45,257 ஆக உயர்ந்துள்ளது. அதேசமயம் இதுவரை 15,83,490 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மருத்துவமனைகளில் 6,39,929 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் கொரோனா பாதிப்புகள் இந்தியாவில் மிக விரைவில் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக