Turn Your Memories into Beautiful Gifts 🎁 – Order Now

Click here to join our WhatsApp channel

புதன், 26 ஆகஸ்ட், 2020

டூவீலர்களுக்கு ஜி.எஸ்.டி.யை குறைக்க பரிசீலனை..?

நேற்று இந்திய தொழில்துறை தலைவர்கள் கலந்துகொண்ட கூட்டத்தில் பேசியமத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன்,  இந்த கொரோனா காலத்தில் மத்திய அரசு அறிவித்த அறிவிப்புகளில் கட்டமைப்பு சார்ந்த சீர்திருத்தங்களை முன்னுரிமை அளித்ததை பார்க்கலாம்.
மேலும், இருசக்கர வாகனங்களுக்கான ஜி.எஸ்.டி.யை குறைக்க வேண்டும் என்பது குறித்து ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் என கூறினார். இந்த கொரோனா வைரஸ் காரணமாக சுற்றுலா தலங்கள், ஓட்டல்கள், விமானம் ஆகியவை பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த துறைகள் தான் பொருளாதார தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய முக்கியமான துறைகள். இந்த துறைகளின் பாதிப்பை குறைப்பது குறித்து வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிடுவது குறித்தும் பரிசீலிக்கப்படும் என்று  தெரிவித்தார் என தகவல் வெளியாகி உள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!