Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

புதன், 26 ஆகஸ்ட், 2020

அறுபது வயதில் வந்த திருமண ஆசை

முல்லாவின் மனைவி இறந்து விட்டதால், முல்லா மறுமணம் செய்து கொள்ள முடிவு செய்தார். அவரின் வயதோ 60. இந்த முதுமைக் காலத்தில் முல்லாவிற்கு ஏற்பட்ட திருமண ஆசை பற்றி அறிந்த அவருடைய நண்பர்களுக்கு முல்லாவின் எண்ணம் சுத்தமாகப் பிடிக்கவில்லை.

ஒரு நாள் நண்பர்கள் முல்லாவிடம் பேசிக் கொண்டே தங்களின் அதிருப்தியை சொன்னார்கள். முல்லா உங்களுக்கு இந்த முதுமைக் காலத்தில் திருமணம் அவசியம் தானா? என நண்பர்கள் கேட்டனர்.

நண்பர்களே, இளமை காலமோ அல்லது முதுமைக் காலமோ எதுவாகிலும் ஒரு ஆணுக்கு ஒரு பெண் துணை தேவை என்றார் முல்லா. இதுதான் நான் முதுமைக் காலத்தில் திருமணம் செய்து கொள்ள ஆசைப்பட்டதன் காரணம். எனக்கு வாய்க்கும் மனைவி நல்லவளாக என்னிடம் அன்பும் ஆதரவும் உள்ளவளாக இருந்தால் முதுமைக் காலத்திலும் நான் மகிழ்ச்சியுடன் இருப்பேன் என்றார்.

முல்லா அவர்களே! நீங்கள் எதிர்பார்த்தற்கு மாறாக முதுமைக் காலத்தில் உங்களுக்கு வந்து வாய்க்கும் மனைவி பொல்லாதவளாக இருந்து விட்டால்? என்று கேட்டனர். வயதுதான் ஆகி விட்டதே? இன்னும் கொஞ்ச காலந்தானே அவளுடன் வாழப் போகிறோம் என்று மனத்தைத் தேற்றிக் கொள்வேன் என்று முல்லா பதிலளித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக