Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

புதன், 12 ஆகஸ்ட், 2020

Xiaomi Mi 10 Ultra: இது வெறும் பிரீமியம் ஸ்மார்ட்போன் இல்லை; இது சூப்பர் பிரீமியம் அல்ட்ரா போன்!





சியோமி Mi 10 அல்ட்ரா



சியோமி நிறுவனம் தனது 10 ஆண்டு ஸ்மார்ட்போன் பயணத்தைக் கொண்டாடுகிறது. இந்த கொண்டாட்டத்தின் அறிமுகமாக சியோமி நிறுவனத்தின் புதிய சூப்பர் பிரீமியம் ஸ்மார்ட்போன் மாடலான சியோமி Mi 10 அல்ட்ரா போனை அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் மிரட்டலான அம்சங்கள், எதிர்பார்க்கப்படும் விலை மற்றும் முழு விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம்.
சியோமி Mi 10 அல்ட்ரா
இந்த ஆண்டு நிறுவனம் வெளியிட்ட Mi 10 ஸ்மார்ட்போனின் மேம்பட்ட வெர்ஷன் மாடலாக இந்த புதிய சூப்பர் பிரீமியம் சியோமி Mi 10 அல்ட்ரா அறிவிக்கப்பட்டுள்ளது. அதிநவீன டிஸ்பிளே, மிரட்டலான கேமரா மற்றும் முன்பு எப்பொழுதும் இல்லாத வகையில் அதிவேக சார்ஜிங் அம்சம் என்று இதில் வழங்கப்பட்டுள்ள அணைத்து அம்சங்களும் அடுத்த லெவலில் மேம்படுத்தப்பட்டுள்ளது என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.
சியோமி நிறுவனத்தின் இந்த புதிய ஸ்மார்ட்போன் சீன சந்தையில் முதலில் அறிமுகம் செய்யப்படும் என்று அறிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து சியோமியின் அனைத்து சந்தைகளிலும் அறிமுகம் செய்யப்படும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. குறிப்பாக அமெரிக்காவின் யூஎஸ் சந்தையில் மட்டும் இந்த சியோமி Mi 10 அல்ட்ரா அறிமுகம் செய்யப்படாது என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.
நான்கு வேரியண்ட்
சியோமி மி 10 அல்ட்ரா நான்கு வேரியண்ட்களில் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ், 8 ஜிபி / 256 ஜிபி, 12 ஜிபி / 256 ஜிபி மற்றும் 16 ஜிபி / 512 ஜிபி வேரியண்ட் மாடலாக இந்திய மதிப்பின்படி தோராயமாக ரூ.37,000 முதல் ரூ.49,000 என்ற விலைக்குள் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அல்ட்ரா கொண்டு வரும் அனைத்து மேம்பாடுகளுடனும், Mi 10 Pro ஐ விட அதிகமாகச் செலவாகும் என்று எதிர்பார்க்கிறோம்.
120 எக்ஸ் டிஜிட்டல் ஜூம்
மேல்-இடதுபுறத்தில் ஒரு 'பஞ்ச்-ஹோல்' கட்அவுட் கொண்ட 1080 x 2400 ரெசல்யூஷன், எச்டிஆர் 10 +, 10-பிட் கலர் மற்றும் 120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்துடன் 6.67 இன்ச் அமோலேட் டிஸ்ப்ளேயுடன் வருகிறது. சியோமி மி 10 அல்ட்ராவில் 120 எக்ஸ் டிஜிட்டல் ஜூம் திறனைக் கொடுக்கப்பட்டுள்ளது. இது சாம்சங் கேலக்ஸி எஸ் 20 அல்ட்ராவை விட அதிகம் என்பது குறிபிடித்தக்கது. பிரதான கேமரா 48MP மட்டுமே, மற்ற Mi 10 தொலைப்பேசிகளைப் போல 108MP இதில் கொடுக்கப்படவில்லை.
பேட்டரி
20 எம்பி அல்ட்ரா-வைட் மற்றும் 12 எம்பி 2 எக்ஸ் ஜூம் போர்ட்ரெய்ட் கேமரா, ஆண்ட்ராய்டு 10 இணக்கத்துடன் கூடிய MIUI இயக்கம், ஸ்னாப்டிராகன் 865 பிராசஸர், மேம்படுத்தப்பட்ட ஆடியோ அனுபவத்திற்காக இரட்டை ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், 120W ஃபாஸ்ட் சார்ஜ் மற்றும் 50W வயர்லெஸ் சார்ஜிங் கொண்ட 4,500 எம்ஏஎச் பேட்டரி ஆகியவற்றுடன் வெள்ளை, கருப்பு மற்றும் ட்ரான்ஸ்பரென்ட் க்ரெய் நிறுத்தில் வருகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக