Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வியாழன், 10 செப்டம்பர், 2020

ஜியோனி எம்12 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம்.! விலை மற்றும் விபரங்கள்.!

ஜியோனி எம்12 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம்.! விலை மற்றும் விபரங்கள்.! | Gionee  M12 Pro Launched: Specs, Features and More - Tamil Gizbot
ஜியோனி நிறுவனம் தனது ஜியோனி எம்12 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடலை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது, குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் விரைவில் அனைத்து சந்தைகளிலும் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ஜியோனி எம்12ப்ரோ ஸ்மார்ட்போனின் பல்வேறு சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.
ஜியோனி எம்12 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடல் ஆனது 6.2-இன்ச் எச்டி பிளஸ் வாட்டர்டிராப் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 1520 x 720 பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது.
இந்த ஸ்மார்ட்போனில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஆக்டோ-கோர் மீடியாடெக் ஹீலியோ பி60 பிராசஸர் வசதி இடம்பெற்றுள்ளது, பின்பு ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.
ஜியோனி எம்12 ப்ரோ ஸ்மார்ட்போனில் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளது, மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் 16எம்பி பிரைமரி லென்ஸ் உடன் மொத்தமாக மூன்று கேமராக்கள் இடம்பெற்றுள்ளது. மேலும் 13எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம், எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட பல்வேறு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.
ஜியோனி எம்12 ப்ரோ ஸ்மார்ட்போனில் 4000எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது,எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. மேலும் பாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பம்,இன் டிஸ்பிளே கைரேகை ஸ்கேனர் உள்ளிட்ட பல்வேறு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.
4 ஜி வோல்டிஇ, வைஃபை 802.11 ஏசி, புளூடூத் வி 5.0, ஜிபிஎஸ் / ஏ-ஜிபிஎஸ், யூ.எஸ்.பி டைப்-சி, ஐஆர் பிளாஸ்டர் மற்றும் 3.5 ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன்மாடல். மேலும் இந்த ஸ்மார்ட்போன் இந்தியாவில் ரூ.7,500-விலையில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக