பப்ஜி விளையாட்டுக்கு தனது தாத்தாவின்
வங்கி கணக்கில் இருந்த 2 லட்சம் ரூபாய் பணத்தை அவருக்கு தெரியாமல் 15 வயது சிறுவன்
செலவழித்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
பொதுமக்கள் வீட்டிலேயே தங்கும் நிலை
கொரோனா தொற்று பரவலை தடுக்க நாடு முழுவதும்
தொடர்ந்து தளர்வுகளோடு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. இதையடுத்து பொதுமக்கள்
வீட்டிலேயே தங்கும் நிலை ஏற்பட்டு வருகிறது. இதில் பெரும்பாலானோர் தங்களது நேரத்தை
டிவியிலும், மொபைல்போனிலும் செலவிட்டனர்.
பிரதானமாக இருந்த பப்ஜி
ஸ்மார்ட்போன்களில் PUBG விளையாட்டு
பிரதானமாக இருந்துள்ளது. பப்ஜி விளையாடுவதில் ஏணையோர் தங்களது நேரத்தை
செலவிட்டனர். வீட்டுக்குள் அமர்ந்துக் கொண்டோ அல்லது நண்பர்களோடு அமர்ந்து கொண்டோ
திடீரென ஒருவர் அவனை சுடு மெடிகிட் கொண்டுவா அப்படி இப்படி என காதில் ஹெட்போன்
மாட்டிக் கொண்டு கத்தும் நிகழ்வையும் நாம் பார்த்திருப்போம்.
பப்ஜி தடை செய்ய வேண்டும் என கோரிக்கை
பப்ஜி விளையாட்டில் பலரும் தங்களை
அடிமைப்படுத்தி கொண்டார்கள். இதையடுத்து அந்த விளையாட்டு தடை செய்ய வேண்டும் என்ற
கோரிக்கை பல்வேறு தரப்பினராலும் முன் வைக்கப்பட்டது. இதில் நேரத்தை செலவிட்டு வந்த
சிலர் மாரடைப்பு ஏற்பட்டு உயரிழந்த சம்பவங்களும் அரங்கேறியுள்ளது.
பப்ஜி விளையாட்டுக்கு இந்தியாவில் தடை
பப்ஜியை தடை செய்ய வேண்டும் என
பல்வேறு தரப்பினரும் குறிப்பாக பெற்றோர்கள் கோரிக்கைகளை முன்னிருத்தி வந்தனர்.
இந்த நிலையில்தான், பப்ஜி விளையாட்டுக்கு இந்தியாவில் தடை விதித்து மத்திய அரசு
உத்தரவு பிறப்பித்தது. பப்ஜி தடையால் ஏணையோர் மன உளைச்சலுக்கு ஆளாகினர். இதில்
ஒருவர் பப்ஜி தடை செய்யப்பட்டதன் காரணமாக தூக்கிட்டு தற்கொலையே செய்து கொண்டார்.
டெல்லி மாநிலத்தை சேர்ந்த 15 வயது
சிறுவன்
இந்த நிலையில் டெல்லி மாநிலத்தை
சேர்ந்த 15 வயது சிறுவன், கடந்த சில மாதங்களாக தன்னை அடிமைப்படுத்தி ஆர்வமுடன்
விளையாடி வந்துள்ளார். பப்ஜி விளையாட்டில் உடைகள் மற்றும் கேரக்டர்கள் வாங்க 2.3
லட்சம் செலவளித்துள்ளார். இந்த அனைத்து பணத்தையும் தனது தாத்தாவின் வங்கிக்
கணக்கின் மூலம் வாங்கியுள்ளார்.
தாத்தாவின் கணக்கின் மூலம் பணம் செலவு
தாத்தாவின் கணக்கை பயன்படுத்தியது
அவருக்கு தெரியக் கூடாது என அவரது மொபைலுக்கு வந்த குறுஞ்செய்தி அனைத்தும்
அழித்துவிட்டு பணத்தை தொடர்ச்சியாக செலவழித்துள்ளார். இதுகுறித்து சிறுவனின் தாத்தா
அவனிடம் கேள்வி எழுப்பியுள்ளார். ஆனால் கணக்கு முடக்கப்பட்டுவிட்டதாக சிறுவன்
தாத்தாவிடம் கூறியுள்ளான்.
பப்ஜி விளையாட்டுக்கு தடை
பப்ஜி விளையாட்டுக்கு தடைவிதித்ததன்
மூலம் விளையாட முடியாமல் போகியுள்ளது. பிஎஸ்என்எல் ஊழியராக பணியாற்றிய சிறுவனின்
தாத்தா தனது ஓய்வூதிய பணத்தை அந்த வங்கிக் கணக்கில் சேகரித்து வைத்துள்ளார். பணம்
காணாமல் போனது குறித்து சைபர் பிரிவினரிடம் புகார் அளிக்கப்பட்டது.
பப்ஜிக்கு பணம் செலவிட்டதை
ஒப்புக்கொண்ட சிறுவன்
இதுதொடர்பான விசாரணையில் வங்கிப் பணம்
மொத்தமும் பேடிஎம் கணக்கு மூலமாக செலவழித்து தெரியவந்துள்ளது. இதையடுத்து,
இதுகுறித்து குடும்பத்தினரிடம் போலீஸார் விசாரணை நடத்தினர். அப்போது அந்த சிறுவன்
தான் பப்ஜி விளையாட்டுக்கு பணத்தை செலவிட்டதை ஒப்புக் கொண்டுள்ளான். சிறுவனுக்கு
கவுன்சிலிங் வழங்கப்பட்டது. இந்த சம்பவம் அவர்களது குடும்பத்தினர் மத்தியில்
அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக