கொடுங்கோல் அரசன் செங்கிஸ் கான் குறித்து பலரும் அறியாத 10 உண்மைகள் பற்றி இந்த தொகுப்பில் காணலாம்.இராணுவ மேதை, அரசியல்வாதி மற்றும் பயங்கரவாதத்திற்கு நிகரான ஆட்சியாளர் செங்கிஸ் கான் பற்றிய 10 உண்மைகள்...
1.
“செங்கிஸ்கான்” உண்மையான பெயர் அல்ல
மங்கோலியர்களின் “கிரேட் கான்” என்று அழைக்கப்படும் செங்கிஸ்கான் 1162ஆம் ஆண்டு ஓனான் ஆற்றின் கரையில் பிறந்தார். அப்போது அவருக்கு தேமுஜின் என்று பெயரிடப்பட்டது. அந்த பெயருக்கு “இரும்பு” மற்றும் “கறுப்பன்” என்று பொருள்.
1206ஆம் ஆண்டில் “குர்ல்தாய்” என்று அழைக்கப்படும் ஒரு பழங்குடி கூட்டத்தில் மங்கோலியர்களின் தலைவராக அறிவிக்கப்படும் வரை “செங்கிஸ் கான்” என்ற மரியாதை தேமுஜினுக்கு கிடைக்கவில்லை. ஒரு தலைவருக்குதான் “கான்” என்று பெயர் வழங்கப்படும். அதேபோல் செங்கிஸ்கானின் தோற்றம் குறித்து வரலாற்றாசிரியர்கள் உறுதிப்படுத்தவில்லை.
2.
குழந்தை பருவம்
சிறுவயதிலிருந்தே மங்கோலியன் ஸ்டெப்பின் மிருகதனத்திற்கு எதிராக போராட கட்டாயப்படுத்தப்பட்டார். இவர்களின் எதிராளியான டாடர்ஸ், செங்கிஸ்கானுக்கு ஒன்பது வயது இருக்கையில் அவரது தந்தைக்கு விஷம் கொடுத்துக் கொன்றார். இந்நிலையில், அவர்கள் வாழ்ந்து வந்த கோத்திரம் அவரது குடும்பத்தை அங்கிருந்து வெளியேற்றியது.
இதை அடுத்து செங்கிஸ்கான் வேட்டையாடுவதற்காக வளர்க்கப்பட்டார். மேலும், அவரது இளம் வயதில் உணவுக்காக சகோதரனை கொன்றதாக கூறப்படுகிறது. செங்கிஸ்கானில் இளம் வயதில், அவரையும், அவரது மனைவியையும் கடத்திச் சென்று எதிரிகள் அடிமைகளாக வைத்துக் கொண்டனர்.
இந்த கஷ்டங்கள் அனைத்தையும் மீறி 20களில் முற்பகுதியில் அவர் ஒரு வலிமையான போர் வீரனாகவும், தலைவராகவும் தன்னை நிறைநிறுத்திக் கொண்டார். ஆதரவாளர்களின் இராணுவத்தை குவித்த பின்னர் பழங்குடியினரின் கூட்டணி ஒன்றை அமைத்தார்.
1206 வாக்கில், அவர் தனது பதாகையின் கீழ் புல்வெளி கூட்டமைப்புகளை வெற்றிகரமாக ஒருங்கிணைத்து வெற்றிக்கு வழி வகுத்தார்.
3.
உறுதியான தகவல் இல்லை
இவ்வளவு பலம் வாய்ந்த தலைவராக அறியப்படும் செங்கிஸ்கானின் தனிப்பட்ட வாழ்க்கை பற்றியும் அவரது உடல் தோற்றம் பற்றியும் மிகக் குறைவாகவே அறியப்படுகிறது. அவரின் சமகால உருவப்படங்கள், சிற்பங்கள் எதுவும் கண்டறியப்படவில்லை. வரலாற்றாசிரியர்களிடம் உள்ள தகவலும் எதையும் உறுதிப்படுத்தப்படவில்லை.
பெரும்பாலான தகவல்கள் அவரை உயரமானவர் என்றும், வலிமையானவர் என்றும், நீண்ட தாடி உடையவர் என்றும் குறிப்பிடுகிறது. 14ஆம் நூற்றாண்டின் பாரசீக வரலாற்றாசிரியர் ரஷீத் அல்-தின் , செங்கிஸ்கானுக்கு பச்சை நிற கண்கள் மற்றும் நீண்ட முடி இருப்பதாக விவரித்துள்ளார்.
அல்-தின்னின் தகவலும் கேள்விக்குரியது தான். அவர் ஒரு போதும் அவரை நேரில் சந்தித்ததில்லை. ஆனால், இந்த குறிப்பிடத்தக்க அம்சங்கள் இனரீதியாக வேறுபட்ட மங்கோலியர்களிடயே காணப்படவில்லை.
4.
முன்னாள் எதிரிகள்
கிரேட்கான் திறமைகள் மீது அக்கரை கொண்டிருந்தார். மேலும், அவர் வழக்கமாக தனது அதிகாரிகளை வர்க்கம், வம்சாவளி, கடந்தகால பழக்க வழக்கங்களை வளர்க்க ஊக்குவித்தார்.
தகுதி மீதான இந்த நம்பிக்கையின் ஒரு பிரபலமான எடுத்துக்காட்டு 1201ல் தைஜுட் பழங்குடியினருக்கும் எதிரான போராட்டத்தில் செங்கிஸ்கானின், மீது செலுத்தப்பட்ட அம்பு அவரது குதிரையை தாக்கி கொன்றது. அதில் நிலைகுலைந்து போன செங்கிஸ்கான், தைஜுட் கைதிகளிடையே உரையாற்றும் போது தன் மீது தாக்குதல் நடத்தியது யார் என்று கேட்டார். அப்போது ஒரு சிப்பாய் தைரியமாக எழுந்து நின்று தான் தான் செய்ததாக ஒப்புக் கொண்டார்.
அந்த அம்பு ஏய்தவரை அழைத்து அவரது தையிரத்துக்கு, இராணுவ அதிகாரி பொறுப்பை வழங்கினார். இதன் நினைவாக அவருக்கு “ஜெபே” என்று பெயர் வழங்கப்பட்டது. அதாவது “அம்பு” என்று பொருள்படும் சொல்லில் பெயர் சூட்டினார்.
ஆசியா மற்றும் ஐரோப்பாவில் மங்கோலியர்கள் வெல்ல ஜெபே, புகழ்பெற்ற ஜெனரல் சுபுதாயுடன் இணைந்து வென்றார்.
5.
வாய்ப்பு கொடுத்தார்
செங்கிஸ்கான் எதிரிகளுக்கு அடிபணிய முதலில் எப்போதும் வாய்ப்பு அளித்திருந்தார். ஆரம்பதிலேயே அவர்களுக்கு எதிராக எப்போதும் அவர் வாள் வீசவில்லை. குவாரெஸ்மிட் பேரரசின் ஷா மங்கோலியர்களுடனான ஒப்பந்தத்தை முறித்த பின்னர், 1219ஆம் ஆண்டில் அவரது பழிவாங்கும் பிரச்சாரம் ஒன்று வந்தது.
சில்க் சாலையில் பொருட்களை பரிமாறிக் கொள்ள ஷாவுக்கு ஒரு மதிப்புமிக்க வர்த்தக ஒப்பந்தத்தை கெங்கிஸ் வழங்கியிருந்தார். ஆனால், அவரது முதல் தூதர்கள் கொலை செய்யப்பட்ட போது கோபமடைந்து தனது படைகளை கட்டவிழ்த்துவிட்டு பதிலளித்தார்.
அடுத்த போரில் ஆயிரகணக்கானோர் கொல்லப்பட்டு ஷா பேரரசு முழுவதும் அழிந்து போனது. செங்கிஸ்கான் தனது வெற்றியை தொடர்ந்து கிழக்கு நோக்கி திரும்பி அங்குள்ள தலைநகரை கைப்பற்றினார்.
6.
40 மில்லியன் மக்களின் இறப்புகளுக்கு காரணம்
மங்கோலியர்களின் வெற்றிக்கு எத்தனை மில்லியன் உயிர்கள் பலிவாங்கப்பட்டது என்பது உறுதிபட தெரியவில்லை. ஆனால், வரலாற்றாசிரியர்கள் 40 மில்லியன் மக்கள் கொல்லப்பட்டதாக கூறுகின்றனர். கானின் ஆட்சியில் சீனாவின் மக்கள் தொகையில் பல்லாயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர் என்று கணக்கெடுப்புகள் கூறுகிறது.
அதேபோல் குவாரெஸ்மிட் உடனான போரின் போது நவீன ஈரானின் மக்கள் தொகையில் நான்கில் மூன்று பங்கினர் கொல்லப்பட்டிருக்கலாம் என்று அறிஞர்கள் மதிப்பிடுகின்றனர். எல்லாவற்றுக்கும் மேலாக மங்கோலியர்களின் தாக்குதலில் முழு உலக மக்கள் தொகையிலும் 11 சதவீதம் குறைந்திருக்கலாம் என்று கணக்கிடப்பட்டுள்ளது.
7.
வெவ்வேறு மதங்கள்
மற்ற பேரரசை போல் அல்லாமல் செங்கிஸ்கான் தனது புதிதாக கைப்பற்றும் பிரதேசங்களின் பன்முகத் தன்மையை தழுவியது. எனவே பல மதங்கள் அவரது ஆட்சியில் இருந்தது. அது மக்கள் கிளர்ச்சி செய்ய வாய்ப்பு குறைவாக இருக்கும் என்றும், கான் அறிவித்தார்.
அதில் வானம், காற்று மற்றும் மலைகளின் ஆவிகளை மதிக்கும் ஒரு ஷாமனிஸ்டிக் நம்பிக்கை முறை, கிறிஸ்தவர்கள், புத்தமதத்தவர்கள், இஸ்லாமியர்கள் போன்றோர் கான் ஆட்சியின் கீழ் இருந்தனர். கிரேட் கான் ஆன்மீகத்தில் தனிப்பட்ட ஆர்வத்தையும் கொண்டிருந்தார்.
முக்கிய நிகழ்வுக்கு முன் அவர் ஜெபிக்கும் வழக்கம் கொண்டிருந்தார். அதேபோல், பல்வேறு மதத்தலைவர்களைச் சந்தித்து விவரங்கள் பற்றி விவாதித்தார்.
8.
முதல் சர்வதேச அஞ்சல் அமைப்பு
வில் மற்றும் குதிரைகள் மங்கோலியர்களின் மிக சக்திவாய்ந்த ஆயுதமாக இருந்திருக்கலாம். “யாம்” என்று அழைக்கப்படும் ஒரு கொரியர் சேவையை துவங்குவது கானின் ஆரம்ப கால கட்டளைகளில் ஒன்று. நிலையான தபால் அமைப்பு இருந்தது.
ஒவ்வொரு சில மைல்களுக்கும் ஓய்வெடுப்பதை தூண்களும் அமைக்கப்பட்டன. எனவே நடை பயணம் மேற்கொள்பவர்கள் 200 மைல்கள் வரை பயணிக்க முடிந்தது.
யாம் பலவகையில் உதவியது. அதாவது உளவாளிகளுக்கும், வெளிநாட்டவர்களுக்கும் பல வகையில் உதவியது. அதன்பின் மார்கோ, போலோ ஆகிய இடங்களிலும் பிரபலமாக பயன்படுத்தப்பட்டு வந்தது.
9.
எப்படி இறந்தார் எங்கு புதைக்கப்பட்டார்
அவர் எப்படி இறந்தார்? மற்றும் எங்கு புதைக்கப்பட்டார் என்ற கேள்விக்கு யாரிடமும் பதில் இல்லை. கானின் வாழ்க்கை பயணம் பற்றிய கேள்வியில் இது மிக முக்கியமான புதிர்.
1227ஆம் ஆண்டில் குதிரையிலிருந்து விழுந்த காயங்களால் இறந்துவிட்டார் என்று வரலாற்று கதைகள் கூறுகிறது. ஆனால், மற்ற ஆதாரங்களில் முழங்கால் காயம் உள்ள பட பலவற்றை பட்டியலிடுகின்றன. ஆனால் அவரது மரணம் பற்றிய தகவல்கள் எதுவும் உறுதிப்படுத்தப்படவில்லை.
புராண கதையில், அவரது இறுதி ஊர்வலத்தில் பலரும் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. பின் அவரது கல்லறைக்கு மேல் பலமுறை குதிரைகள் சவாரி செய்ததாகவும் அறியப்படுகிறது. இந்த கல்லறை மங்கோலியன் மலையிலோ அல்லது புர்கான் கல்தூண் என்ற மலையிலோ இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
10.
நினைவுகளை பறிக்க நினைத்த சோவியத்துகள்
தற்போது செங்கிஸ்தான் பெரிய அளவில் பேசப்பட்டாலும், சோவியத் ஆட்சியில் செங்கிஸ்தானின் பெயரை குறிப்பிடவே தடை செய்யப்பட்டிருந்தது. செங்கிஸ்தானின் இடத்திற்கு செல்லவும், அதை பற்றி படிக்கவும் சோவியத் ஆட்சியில் தடை செய்யப்பட்டிருந்தது.
1990களின் முற்பகுதியில் நாடு சுதந்திரம் பெற்ற பின்ன செங்கிஸ்கான் மற்றும் மங்கோலிய வரலாறுகள் மீட்டெடுக்கப்பட்டது. அதன்பின் செங்கிஸ்தானின் உருவம் மங்கோலிய நாணயத்திலும் குறிப்பிடப்பட்டது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக