Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

திங்கள், 7 செப்டம்பர், 2020

ஏர்டெல் பயனர்களுக்கு மிகப்பெரிய குட் நியூஸ்; இனிமே இதில் அன்லிமிடெட் டேட்டா!

ஏர்டெல் நிறுவனம் தற்போதுள்ள அதன் அனைத்து பிராட்பேண்ட் சந்தாதாரர்களுக்குமான டேட்டா நன்மைகளை திருத்தி உள்ளதாக கூறப்படுகிறது. முன்னதாக, ஏர்டெல் அதன் அனைத்து பிராட்பேண்ட் திட்டங்களிலும் - அதாவது பேஸிக், எண்டர்டெயின்மெண்ட், பிரீமியம் மற்றும் விஐபி திட்டங்களிலும் - ஒரு நிலையான டேட்டா வரம்பை கொண்டிருந்தது

ஆனால் இந்த டெலிகாம் நிறுவனம் இப்போது இருக்கும் அனைத்து பிராட்பேண்ட் சந்தாதாரர்களுக்கும் வரம்பற்ற டேட்டா நன்மைகளை வழங்குவதாக ஒரு புதிய அறிக்கை தெரிவிக்கிறது.


முகேஷ் அம்பானி தலைமையிலான ஜியோ ஃபைபர் தனது போர்ட்ஃபோலியோவை மறுசீரமைத்த பின்னர், அதன் சந்தாதாரர்களுக்கு "வரம்பற்ற டேட்டாவை" ரூ.399 க்கு வழங்கி வருகிறது.

ஜியோ வரம்பற்ற டேட்டா நன்மையை வழங்குவதாகக் கூறினாலும், நிறுவனம் தனது “ட்ரூலி அன்லிமிடெட்” திட்டங்களுக்காக 3300 ஜிபி என்கிற வரம்பினை கொண்டுள்ளது. கூறப்படும் ஏர்டெல்-இன் வரம்பற்ற டேட்டா நன்மையும் இதேபோன்ற டேட்டா வரம்பினைக் கொண்டிருக்கக்கூடும்.

ஒன்லி டெக்கின் அறிக்கையின்படி, ஏர்டெல் நிறுவனம் தற்போதுள்ள அதன் அனைத்து பிராட்பேண்ட் திட்ட சந்தாதாரர்களுக்கான டேட்டா நன்மைகளை மாற்றும் பணியில் ஈடுபட்டுள்ளது. இதில் பேஸிக், எண்டர்டெயின்மெண்ட், பிரீமியம் மற்றும் விஐபி சந்தாதாரர்களும் உள்ளனர், முன்னதாக இவர்கள் நிலையான டேட்டா வரம்புகளுடன் மட்டுப்படுத்தப்பட்டிருந்தனர்.

மேம்படுத்தப்பட்ட டேட்டா நன்மைளானது தற்போதுள்ள ஆக்டிவ் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே கிடைக்கும் என்றும் வெளியான அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த வார தொடக்கத்தில் பெரும்பாலான சந்தாதாரர்களை ஈர்க்கும் நோக்கத்தின் கீழ் ஜியோ ஃபைபர் திட்டங்களின் மீது ஆக்கிரமிப்பு மிகுந்த திருத்தங்கள் நிகழ்த்தப்பட்டது. அதன் விளைவாக, ஏர்டெல் நிறுவனம் தனது பிராட்பிராண்ட் சந்தாதாரர்களை தக்க வைத்துக்கொள்ள வரம்பற்ற டேட்டா நன்மைகளை வழங்கலாம்.

சமீபத்தில் ஏர்டெல் தனது ரூ.299 அன்லிமிடெட் டேட்டா பேக்கை தனது வலைத்தளத்திலிருந்து நீக்கியது. இந்த நடவடிக்கையின் வழியாகவே ஏர்டெல் நிறுவனம் ஒரு "மறுசீரமைப்பில்" செயல்படுகிறது என்பதை புரிந்துகொள்ள முடிகிறது. இருப்பினும் ஏர்டெல் தனது வலைத்தளத்திலும், அனைத்து பயனர்களுக்குமான MyAirtel ஆப்பிலும் இந்த மாற்றத்தை இன்னும் பிரதிபலிக்கவில்லை என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

ஆந்திரா மற்றும் குஜராத் வட்டங்களில், ஏர்டெல் நீண்ட காலமாக பிராட்பேண்ட் திட்டங்களின் வழியாக வரம்பற்ற டேட்டாவை வழங்கி வருகிறது. இந்த ‘வரம்பற்ற தரவு’ நன்மை 3300GB FUP என்கிற வரம்புடன் வருகிறது, குறிப்பிட்ட டேட்டா நன்மை தீர்ந்ததும் இணைய வேகம் 1Mbps ஆக குறையும். இதே அளவிலான வரம்பு மற்ற வட்டங்களிலும் அறிமுகப்படுத்தப்படலாம் அல்லது முற்றிலும் வேறு நன்மைகள் அறிவிக்கப்படலாம்.


இந்த இடத்தில் திருத்தப்பட்ட மற்றும் புதிய ஜியோ ஃபைபர் தனது திட்டங்களானது சமச்சீர் வேகத்தை வழங்குகிறது, அதாவது பதிவிறக்க வேகம் பதிவேற்ற வேகத்திற்கு சமமாக இருக்கும். தவிர புதிய நுகர்வோர் அனைவருக்கும் ‘நிபந்தனை இல்லாத’ 30 நாள் இலவச சோதனையும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக