Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

புதன், 9 செப்டம்பர், 2020

சென்னையில் நாளை முதல் மெட்ரோ ரயில் நேரம் நீட்டிப்பு

Metro
சென்னையில் நாளை முதல் மெட்ரோ ரயில் இயங்கும் நேரம் நீட்டிக்கப்படுவதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது
சென்னையில் கடந்த 7ஆம் தேதி முதல் மெட்ரோ ரயில்கள் இயங்கி வருகிறது என்பது தெரிந்ததே. முதல் கட்டமாக விமான நிலையம் முதல் வண்ணாரப்பேட்டை வரையிலான மெட்ரோ ரயில் இயக்கப்பட்டது. அதன் பின்னர் இன்று முதல் சென்னை சென்ட்ரல் முதல் பரங்கிமலை வரையிலான மெட்ரோ ரயில் இயக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது
ஐந்து மாதங்களுக்கு பின் மெட்ரோ ரயில் மீண்டும் இயக்கப்பட்டதால் சென்னை வாழ் மக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். பேருந்து பயணத்தை விட மெட்ரோ ரயில் பயணம் மிகவும் பாதுகாப்பானது என்றும் அவர்கள் தெரிவித்து வருகின்றனர்
இந்த நிலையில் காலை 7 மணி முதல் இரவு 8 மணி வரை மட்டுமே இயக்கப்பட்டு வந்த மெட்ரோ ரயில் பொதுமக்களின் கோரிக்கையை அடுத்து நாளை முதல் கூடுதலாக ஒரு மணி நேரம் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே நாளை முதல் இரவு 9 மணி வரை மெட்ரோ ரயில் சேவை இயங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. மெட்ரோ ரயில் நிர்வாகத்தின் இந்த அறிவிப்பு சென்னை மக்களை மிகுந்த மகிழ்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக