Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வியாழன், 3 செப்டம்பர், 2020

கன்னி ராசியில் சூரியன் இருந்தால் கிடைக்கும் பலன்கள் !!

கன்னி ராசியின் அதிபதி புதன் ஆவார். சூரியன் புதனுடன் சமம் என்ற நிலையில் இங்கு நிற்கின்றார். இனி சூரியன் கன்னியில் இருக்கும் போது ஏற்படும் நன்மைகள், தீமைகள் பின்வருமாறு :

தன்னுடைய பேச்சுகளினால் தானே மாட்டிக்கொள்வார்கள்.

செய்யும் செயலில் உள்ள அலட்சிய போக்கினால் காலதாமதம் உண்டாகும்.

முன் கோபத்தால், கிடைக்கும் வாய்ப்புகளை இழந்து பின் அதற்காக வருத்தப்படமாட்டார்கள்.

கடுமையான பேச்சுகளாலும், அலட்சிய நடவடிக்கையாலும், குடும்பத்திலும் சக பணியாளர்களிடம் அனுகூலமான சூழல் உண்டாகாது.

பெற்றோர் மீது மிகுந்த அன்பு கொண்டவர்கள்.

எந்த பிரச்சனைகள் இருக்கும் பட்சத்திலும் படுத்த உடனே தூங்கிவிடுவார்கள்.

ஆன்மீக பயணங்களை அடிக்கடி மேற்கொள்வார்கள்.

தத்துவம் பேசுவதில் வல்லவர்கள்.

தற்பெருமை பேசும் குணம் உடையவர்கள்.

பாட்டியின் மீது மிகுந்த அன்பு கொண்டவர்கள்.

எதிலும் புகழ்ச்சியை விரும்பக்கூடியவர்கள்.

வீண் செலவு செய்வதில் வல்லவர்கள்.

மனைவியின் மீது அன்பும், அவர்களின் தேவைகளையும் நிறைவேற்றக்கூடியவர்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக