Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

புதன், 9 செப்டம்பர், 2020

தீபாவளி பண்டிகையை நம்பியிருக்கும் அரசு வங்கிகள்..!

பொதுத்துறை வங்கிகள்

இந்தியாவில் கடந்த சில மாதங்களாக ஏற்பட்ட பொருளாதாரம் மற்றும் வர்த்தக மாற்றங்கள் பல துறை சார்ந்த பல கோடி நிறுவனங்கள் பெரிய அளவிலான நிதி நெருக்கடியிலும், வருவாய் சரிவையும் சந்தித்தது. இந்த மோசமான காலகட்டத்தில் இந்திய வங்கிகளில் மத்தியில் பெரிய அளவிலான வர்த்தகப் போராட்டமே நடந்துள்ளது.
ஆம் இந்த இக்கட்டான காலகட்டத்தில், ரீடைல் கடன் பிரிவில் அதிகளவிலான வர்த்தகத்தைத் தனியார் வங்கிகள் கைப்பற்றிய நிலையில் பொதுத்துறை நிறுவனங்கள் இக்காலகட்டத்தில் அதிகளவிலான வர்த்தகத்தை இழந்து உள்ளது. இதனால் பொதுத்துறை வங்கிகளின் வர்த்தக ஆதிக்கத்திலும் சில மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாகப் பொதுத்துறை வங்கி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலை மாறப் பொதுத்துறை வங்கிகள் பண்டிகை காலத்தை எதிர்நோக்கிக் காத்துக்கொண்டு இருக்கிறது.
பொதுத்துறை வங்கிகள்
பொருளாதாரம் மிகவும் மந்தமாக இருக்கும் இந்தக் காலகட்டத்தில் ரீடைல் கடன் பிரிவில் தனியார் வங்கிகள் அதிகளவிலான வர்த்தகத்தைக் கைப்பற்றிய நிலையில், மீண்டும் வர்த்தகச் சந்தையில் ஆதிக்கம் செலுத்த வேண்டும் எனத் திட்டத்துடன் இந்தியன் வங்கி, பாங்க் ஆப் மகாராஷ்டிரா போன்ற வங்கிகள் அதிக அளவிலான வர்த்தகத்தை ஈர்க்க வேண்டும் என்பதற்காகக் கார் மற்றும் ஹோம் லோன் பிரிவு கடன்களுக்கு வட்டி அதிகளவில் குறைபட்டும், processing கட்டணத்தில் சில தள்ளுபடிகளையும் வழங்கியுள்ளது.
ஆனால் இக்காலகட்டத்தில் பொதுத்துறை வங்கியில் தங்கக் கடன் பிரிவில் அதிகளவிலான வர்த்தகம் குவிந்துள்ளது.
பண்டிகை காலம்
லாக்டவுன் தளர்வு அளிக்கப்பட்ட காலத்தில் இருந்து பொதுத்துறை வங்கிகள் ஒவ்வொரு மாதமும் ரீடைல் பிரிவில் தொடர் வர்த்தக உயர்வைச் சந்தித்து வருகிறது. ஆனால் உண்மையான வர்த்தக உயர்வையும், அதிகளவிலான வர்த்தகத்தையும் தீபாவளி, நவராத்திரி பண்டிகை காலத்தில் தான் சிறப்பாக இருக்கும்.
எனவே பொதுத்துறை வங்கிகள் பண்டிகை காலத்தில் அதிகளவிலான வர்த்தகத்தை ஈர்க்க பெரிய அளவிலான திட்டத்தைத் தீட்டி வருகிறது எனப் பாங்க் ஆப் மகாராஷ்டிரா வங்கி தலைவர் ராஜீவ் தெரிவித்துள்ளார்.
தள்ளுபடி
பொதுவாக இந்தியாவில் பண்டிகை காலத்தில் கார், பைக், வீடு, தங்கம், எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் என அனைத்து விற்பனை பிரிவிலும் தள்ளுபடி அறிவிக்கப்படும். எனவே இந்தக் காலகட்டத்தில் கடன் வாங்குவோரின் எண்ணிக்கையும் அதிகமாக இருக்கும்.
இதனை மையமாக வைத்துத் தான் பொதுத்துறை வங்கிகள் இக்காலகட்டத்தை முக்கிய இலக்காக வைத்து அதிகளவிலான வர்த்தகத்தைப் பெறத் திட்டமிட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக