Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

செவ்வாய், 29 செப்டம்பர், 2020

கண்மூடி திறப்பதற்குள் சிஎஸ்கே அணியில் நடந்த மாற்றம்! – அதிர்ச்சியில் ரசிகர்கள்

 



அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் ஐபிஎல் போட்டியில் சிஎஸ்கே அணி மோசமாக விளையாடி வரும் நிலையில் தற்போது ஏற்பட்டுள்ள மாற்றம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


தற்போது நடைபெற்று வரும் இந்த ஆண்டிற்கான ஐபிஎல் போட்டியில் மூன்று முறை விளையாடியுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, முதலாவது போட்டியில் வெற்றி பெற்றதை தவிர்த்து மற்ற இரு ஆட்டங்களிலும் தோல்வியே தழுவியுள்ளது. முதல் ஆட்டத்தில் சிறப்பாக விளையாடிய அம்பத்தி ராயுடு அடுத்த இரண்டு ஆட்டங்களில் இல்லாததும் தோல்விக்கு காரணம் என கருதப்படுகிறது.

இந்நிலையில் சிஎஸ்கே ரசிகர்களே பலர் சுரேஷ் ரெய்னா இருந்திருந்தால் இந்த நிலை ஏற்பட்டிருக்காது. உடனே சுரேஷ் ரெய்னாவை அணியில் சேர்க்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அதிகாரப்பூர்வ வலைதளத்தில் இருந்து சுரேஷ் ரெய்னா, ஹர்பஜன் சிங் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. இதன்மூலம் சுரேஷ் ரெய்னா மீண்டும் வர சாத்தியமில்லை என சொல்லாமல் சொல்லி இருக்கிறது சிஎஸ்கே நிர்வாகம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக