Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

புதன், 2 செப்டம்பர், 2020

ஜெயம்ரவியின் 'பூமி' படத்தின் புது அப்டேட்.!

ஜெயம்ரவியின் பூமி படத்திலுள்ள பர்ஸ்ட் சிங்கிளான 'தமிழன் என்று சொல்லடா' என்ற பாடல் செப்டம்பர் 10ம் தேதி வெளியிடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் ஜெயம்ரவி கடைசியாக கோமாளி என்ற படத்தில் பாக்ஸ் ஆஃபிஸில் வசூலை அள்ளி குவித்தார். தற்போது இவர் பூமி, ஜன கண மன, பொன்னியின் செல்வன் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். அதில் பூமி திரைப்படத்தை சுஜாதா விஜயகுமார் தயாரிக்க லட்சுமணன் இயக்கியுள்ளார் .இவர் ஜெயம் ரவியின் ரோமியோ ஜூலியட், போகன் ஆகிய படங்களை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நிதி அகர்வால் நடித்துள்ளார். மேலும் ரோனிட் ராய், சதீஷ், ராதாரவி, சரண்யா பொன்வண்ணன், தம்பி ராமையா உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
இந்த படத்திற்கு டி. இமான் இசையமைக்கிறார். ஊரடங்கிற்கு முன்பு படப்பிடிப்புகள் முடிந்த நிலையில் தற்போது இந்த படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் நடந்து வருகிறது. மே மாதத்தில் வெளியாகவிருந்த இந்த படம் கொரோனா தொற்று காரணமாக ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டது . ஏற்கனவே இந்த படத்தின் பர்ஸ்ட் லுக், செக்கன்ட் லுக் மற்றும் மூன்றாவது லுக் போஸ்ட்ர்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றதை அடுத்து தற்போது இந்த படத்திலிருந்து 'தமிழன் என்று சொல்லடா' என்ற பாடல் செப்டம்பர் 10ம் தேதி வெளியிடவுள்ளதாக டி. இமான் அவர்கள் தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக