நடிகர் சூர்யா தற்போது நடித்து முடித்துள்ள திரைப்படம் சூரரை போற்று. இப்படத்தை சுதா கோங்குரா இயக்குகிறார். மேலும் இப்படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக அபர்ணா பாலமுரளி நடித்துள்ளார். மேலும் சம்பத் ராஜ், கருணாஸ், ஜாக்கி ஷ்ரூஃப் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.இப்படத்திற்கு ஜி. வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.
இந்த நிலையில் இந்த திரைப்படம் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக திரையரங்கில் வெளியாகாமல் அக்டோபர் 30ம் தேதி அமேசான் பிரேமில் வெளியாவதாக நடிகர் சூர்யா தனது ட்வீட்டர் பக்கத்தில் அண்மையில் தெரிவித்திருந்தார்.
மேலும், இந்நிலையில் சூரரைப்போற்று திரைப்படத்தை பார்த்த தயாரிப்பாளர் குணீத் மோங்கா படத்தை பற்றி கூறியது, படம் மிகவும் சிறப்பாக உள்ளது என்று. ஒரு பெண் இயக்குனர் இப்படி ஒரு திரைப்படம் எடுக்கமுடியும் என்பது சந்தேகம் தான் கடந்த 20 ஆண்டுகளில் இதைபோல் ஒரு திரைபடம் நான் பார்த்தது இல்லை என்றும் கூறியுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக