ஒரு நாள் கந்தன் தெரு வழியாக நடந்து
செல்லும் போது ஒரு குடிசையின் வாசலை கடந்து செல்லும் போது குடிசைக்குள் இருந்து
ஏதோ ஒரு சத்தம் கேட்க உள்ளே சென்று பார்த்தார். அந்தக் குடிசையில் ஒரு ஏழை விதவைப்
பெண். அவளுக்கு பத்து வயதில் ஒரு மகன் இருந்தான். அவள் துணிகளை தைத்துக் கொடுத்து
கொண்டு வாழ்க்கையை நடத்திக் கொண்டிருக்கிறாள் என்பது கந்தனுக்கு ஏற்கனவே நன்கு
தெரியும்.
வீட்டுக்குள் தாயும் மகனும் எதோ
சண்டைப் போட்டுக் கொண்டிருப்பதைப் பார்த்து, இங்கே என்ன நடக்கிறது? என்று கந்தன்
கேட்டார். அதற்கு அந்த பெண் கந்தன் அவர்களே, இவன் எனது ஒரே மகன். ஒழுங்காக
பள்ளிக்கூடம் போகமாட்டேன் என்று அடம்பிடிக்கிறான், அறிவுரை சொல்லிப் பார்த்தேன்,
அடித்தும் பார்த்தேன் ஆனால் பள்ளிக்கூடம் போகமாட்டேன் என்கிறான், என்றாள் தாய்
வேதனையோடு.
தம்பி நீ பள்ளிக்கூடம் போக வேண்டியது
அவசியம் என்று கந்தன் சிறுவனுக்கு புத்திமதி கூறினார். நான் பள்ளிக்கூடம்
போகப்போவதே இல்லை என்று அடம்பிடித்தான். கந்தன், அந்தப் பையனின் தாய் தைப்பதற்காக
வைத்திருந்த விலை உயர்ந்த துணி ஒன்றை எடுத்து துண்டாகக் கிழித்து விட்டார்.
அதைக்கண்டு தாயும் மகனும் அதிர்ச்சியும் திகைப்பு அடைந்தனர். அம்மா..! கந்தன் விலை
உயர்ந்த துணியைக் கிழித்து விட்டரே? என்று பையன் கேட்டான்.
பள்ளிக்கூடம் போகாததால் உன் எதிர்கால
வாழ்க்கையையே பாழாகும்போது, இந்த விலை உயர்ந்த துணி பாழானது பெரிய விஷயமா என்றார்
கந்தன். இந்தச் சொற்கள் அவன் மனத்தில் பெரிய மாறுதலை உண்டாக்கிற்று. உடனே
புத்தகங்களை எடுத்துக் கொண்டு பள்ளிக்குப் புறப்பாட்டான். அவன் சென்ற பிறகு கந்தன்
தாம் கிழித்த துணியின் மதிப்புக்கேற்ற விலையைக் கொடுத்துவிட்டுப் புறப்பட்டார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக