Huawei நிறுவனம் என்ஜாய் 20 சீரிஸ் ஸ்மார்ட்போன் மாடல்களை ஒரு வழியாக அறிமுகம் செய்துள்ளது. இந்நிறுவனத்தின் சமீபத்திய மலிவு விலை ஸ்மார்ட்போன் சீரிஸ் மாடலாக என்ஜாய் 20 மற்றும் என்ஜாய் 20 பிளஸ் ஸ்மார்ட்போன்கள் தற்பொழுது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த இரண்டு புதிய சாதனங்களும் 5 ஜி நெட்வொர்க் இணைப்புடன் சீனாவில் அறிமுகமாகியுள்ளது. இதன் இந்திய எதிர்பார்ப்பு விலை மற்றும் சிறப்பம்சங்களைப் பார்க்கலாம்.
ஹூவாய் நிறுவனம் ஹூவாய் என்ஜாய் 5ஜி ஸ்மார்ட்போனில், 6.6' இன்ச் எச்டி பிளஸ் டிஸ்ப்ளேவை 20: 9 விகிதம் கொண்ட 8 எம்.பி செல்பி கேமராவுடன் கூடிய வாட்டர் டிராப் நாட்ச் ஸ்டைல் வடிவம் பெற்றுள்ளது. பின்புறத்தில் நான்கு கேமராக்களைக் கொண்டுள்ளது. இந்த சாதனம் 13MP முதன்மை கேமராவும், 5MP சூப்பர்-வைட் சென்சார் 2MP டெப்த் சென்சார் கொடுக்கப்பட்டுள்ளது.10W சார்ஜிங் ஆதரவுடன் 5,000 mAh பேட்டரியுடன் வருகிறது.
ஹூவாய் என்ஜாய் 20 பிளஸ் ஸ்மார்ட்போனில், 6.63' இன்ச் எஃப்.எச்.டி பிளஸ் டிஸ்ப்ளேவுடன் நாட்ச் எதுவும் இல்லாத முழு டிஸ்பிளேயாக வருகிறது. இதில் செல்பி கேமராவிற்கு என்று எந்த இடமுமில்லை, மாறாக, சாதனம் 16MP சென்சார் கொண்ட பாப்-அப் செல்பி கேமராவுடன் வருகிறது. இந்த 48 எம்பி முதன்மை கேமராவுடன் 8 எம்பி சென்சார் மற்றும் 2 எம்பி சென்சார் கொண்டுள்ளது. இரண்டு ஸ்மார்ட்போன்களும் ஒரே மீடியாடெக் டைமன்சிட்டி 720 செயலியில் இயங்குகின்றது.
இதன் மென்பொருளும் ஒன்றாகவே இருக்கிறது, அதாவது, ஆண்ட்ராய்டு 10 இணக்கத்துடன் இயங்கும் EMUI 10.1 இயங்குதளம் இதில் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் 4,200 mAh பேட்டரி 40W பாஸ்ட் சார்ஜிங் அம்சத்துடன் வருகிறது. ஹூவாய் 20 5 ஜி ஸ்மார்ட்போன் மற்றும் ஹூவாய் என்ஜாய் 20 பிளஸ் 5 ஜி ஸ்மார்ட்போனின் விலை விபரங்களைப் பார்க்கலாம்.
ஹூவாய் என்ஜாய் 20 5 ஜி ஸ்மார்ட்போனின் 4 ஜிபி / 128 ஜிபி சேமிப்பு வேரியண்ட் இந்திய மதிப்பின்படி சுமார் ரூ. 18,242 விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதேபோல், 6 ஜிபி / 128 ஜிபி மாடல் தோராயமாக ரூ. 20,378 ஆகிறது. மறுபுறம், ஹுவாய் என்ஜாய் 20 பிளஸ் 5 ஜி போனின் 6 ஜிபி / 128 ஜிபி மாடல் ரூ. 24,674 என்ற விலையிலும் இதன் 8 ஜிபி மாடல் தோராயமாக ரூ .26,820 என்ற விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்தியா உள்ளிட்ட சர்வதேச சந்தைகளில் இரண்டு ஸ்மார்ட்போன்களும் எப்போது வெளியாகும் என்று இன்னும் சரியாகத் தெரியவில்லை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக