Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வியாழன், 3 செப்டம்பர், 2020

Microsoft Word அதிகம் பயன்படுத்தும் பயனர்களுக்கு தரமான வசதி அறிமுகம்.! பயன்படுத்துவது எப்படி?

உலகளவில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தயாரிப்புகளை அதிகளவு பயன்படுத்துகின்றனர் என்றுதான் கூறவேண்டும், குறிப்பாக கணினியின் இதயம் போல செயல்படுகிறது இந்நிறுவத்தின் தயாரிப்புகள். மேலும் இந்நிறுவனம் தொடர்ந்து பல்வேறு முயற்சிகளை செயல்படுத்தி வருகிறது.

365ஆப்ஸ்களில் தொடர்ந்து புதிய அம்சங்களைச் சேர்த்துக்
அதன்படி இந்நிறுவனம் ஆபிஸ் 365ஆப்ஸ்களில் தொடர்ந்து புதிய அம்சங்களைச் சேர்த்துக் கொண்டிருக்கிறது. அதன்படி மைக்ரோசாப்ட் சமீபத்தில் சேர்த்த மற்றொரு புதிய அம்சம் தான் மைக்ரோசாப்ட் வேர்ட்டில் அணுக கிடைக்கும் டிரான்ஸ்க்ரைப் (Transcribe) ஆகும்.

அணுக கிடைக்கும்
அதாவது வெப் வழியாக அணுக கிடைக்கும் மைக்ரோசாப்ட் வேர்ட் ஆனது நிகழ்வில் நடந்துகொண்டிருக்கும் உரையாடலை அல்லது முன்பே பதிவுசெய்யப்பட்ட ஆடியோ கோப்பை டிரான்ஸ்க்ரைப் செய்தல் முடியும்.
40 கிலோ எடை., ஒரே நாளில் பணக்காரர் ஆனா விவசாயி! விண்கல் செய்த மாயம்!

நிருபர்கள், மாணவர்கள்,
குறிப்பாக நிருபர்கள், மாணவர்கள், தொழில்முனைவோர் போன்றவர்களுக்கு இது கண்டிப்பாக பயனுள்ள வகையில் இருக்கும், இதை மனதில் வைத்தே இந்த புத்தம் புதிய அம்சம் உருவாக்கப்பட்டுள்ளது.

அம்சம் ஆனது Office365

குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் புதிய டிரான்ஸ்க்ரைப் அம்சம் ஆனது Office365 பயனர்களுக்கு கிடைக்கும் என்றுதெரிவிக்கப்பட்டுள்ளது. இருந்தபோதிலும் தற்சமயம் இந்த வேர்டின் வெப் பதிப்பில் மட்டுமே கிடைக்கிறது. வெளிவந்த தகவலின்படி இந்த ஆண்டு இறுதிக்குள் ஆப்பிள் மற்றும் ஆண்டராய்டு வேர்ட் ஆப்பில் இந்த அம்சம் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆதரிக்கப்படும் மொழி 

அதேபோல தற்போது ஆதரிக்கப்படும் மொழி ஒன்று தான் அதுவும் ஆங்கிலம். ஆனால் எதிர்காலத்தில் மேலும் பல மொழிகளை சேர்க்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. பின்பு இந்த அம்சத்தைப் பயன்படுத்த அப்லோட் செய்யப்படும் கோப்பின் அளவு 200எம்பி என்று வரையறுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்க்கது.தரிக்கப்படும் ஆடியோ
பின்பு இப்போது ஆதரிக்கப்படும் ஆடியோ பார்மட்கள் என்னவென்றால், wav, .mp4, .m4a, .mp3 போன்றவைகள் ஆகும். பின்பு கூகுள் க்ரோம் மற்றும் மைக்ரோசாப்ட் எட்ஜ் பயனர்களுக்கும் இந்த அட்டகாசமான அம்சம் கிடைக்கிறது. பின்பு இந்த புதிய அம்சத்தை பயன்படுத்தும் வழிமுறைகளை சுருக்கமாக பார்ப்போம்.

வழிமுறைகள்

முதலில் மைக்ரோசாப்ட் எட்ஜ் அல்லது கூகுள் க்ரோம் பயன்படுத்தி Office.com இல் உங்கள் Microsoft அக்கவுண்டில் சைன்இன் செய்தல் வேண்டும்.
அடுத்து மைக்ரோசாப்ட் வேர்டுக்கு சென்று, அதில் இருக்கும் டூல்பாரில் வலதுபுறத்தில் உள்ள மைக் ஐகானைக் கிளிக் செய்ய வேண்டும்.

பின்னர் கீழ்தோன்றும் டிராப் டவுன் ஏரோ-வை கிளிக் செய்து, பின்னர் டிரான்ஸ்கிரிப்ட் என்பதை தேர்வுசெய்யவும்.

கடைசியாக ஃபைல் பிக்கர் வழியாக உங்கள் ஆடியோ கோப்பைத் தேர்வுசெய்யவும், செயல்முறை முடியும் வரை டிரான்கிரிப்ட் பேனலை திறந்தே வைக்கவும், பின்பு இது அருமையாக வேலை செய்யும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக