Nike இந்த பிராண்டினை நம்மில் பலரும் கேள்விப்பட்டிருப்போம். ஏன் இந்த பிராண்டினை வாங்கியும் பயன்படுத்தி இருக்கலாம்.
அமெரிக்காவின் மிகப்பெரிய முன்னணி நிறுவனமான நைக் பேஷன் உற்பத்தி, ஆடைகள், காலணிகள் என பல பொருட்களையும் உற்பத்தி செய்து, உலகம் முழுக்க பல நாடுகளில் வெற்றிகரமாக விற்பனை செய்தும் வருகின்றது.
அதிலும் விளையாட்டு துறையில் பயன்படுத்தும் ஷூக்கள் மற்றும் ஆடைகள்
நைக்கின் சீனா சந்தை
இப்படி உலகம் முழுக்க இந்த நிறுவனம் வர்த்தகத்தினை மேற்கொண்டு வந்தாலும், அதன் முக்கிய சந்தை அமெரிக்காவிற்கு அடுத்து சீனா தான். அது எந்தளவுக்கு எனில், கடந்த 2009ம் ஆண்டில் காலணிகள் மற்றும் ஆடைகள், மற்றும் சில உபகரணங்கள், என அனைத்து தரப்பிலுமான மொத்த வருவாய் 1,743 மில்லியன் டாலர்களாகும். இது 2019ம் ஆண்டில் 6,208 மில்லியன் டாலர்களாக அதிகரித்துள்ளது. இதுவே நடப்பு ஆண்டில் 6,679 மில்லியனாக அதிகரிக்கும் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது.
சீனாவின் தேவை தான் காரணம்
இதற்கிடையில் நைக் நிறுவனத்தின் வருவாய் குறித்தான மதிப்பீடுகளில், நைக் நிறுவனம் வென்றுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இதற்கு முக்கிய காரணமே. சீனாவின் வலுவான தேவை அதிகரிப்பு தான் என்றும் கூறப்படுகிறது. மேலும் இதன் ஆன்லைன் விற்பனை அமோகமான விற்பனையை கண்டு வருவதாகவும் கூறப்படுகிறது. நைக் அதன் பங்குகளில் சுமார் 9% அனுப்புவதாகவும் இந்த மதிப்பீடுகள் கூறுகின்றன.
நேரடி விற்பனையில் கவனம்
அதுமட்டும் அல்ல, நைக் நிறுவனம் நேரடியான நுகர்வோர் விற்பனையில் கவனம் செலுத்தி வருவதும், இந்த வளர்ச்சிக்கு முக்கிய காரணம் என்று ஆய்வுகள் கூறுகின்றன. தற்போது கொரோனா பரவல் காரணமாக இந்த நிறுவனம் மால்களிலோ அல்லது டிபார்மென்ட்களிலோ பொருட்கள் வாங்குவதை கட்டாயம் தவிர்க்குமாறும் கூறியுள்ளது.
களைகட்டிய ஆன்லைன் விற்பனை
ஆகஸ்ட் 31வுடன் முடிவடைந்த காலாண்டில் நைக் பிராண்டின் ஆன்லைன் விற்பனையானது 82% அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது. குறிப்பாக அனைத்து பிராந்தியங்களிலுமே விற்பனையானது இரட்டை இலக்க வளர்ச்சியினை பதிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளது. சீனாவின் விற்பனையானது, மற்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது அபரிமிதமாக 6% வளர்ச்சி கண்டுள்ளதாகவும் நைக் தெரிவித்துள்ளது.
முக்கிய சந்தையில் சரிவு
எனினும் இந்த நிறுவனத்தின் மிகப்பெரிய சந்தையான வட அமெரிக்காவில் விற்பனையானது, 2% சரிந்து 4.23 பில்லியன் டாலர்களாக குறைந்துள்ளது. எனினும் ஆய்வாளர்களில் மதிப்பீடான 3.39 பில்லியன் டாலரினை எளிதில் வென்றுள்ளது என்றும் IBES தரவுகள் கூறுகின்றன. நைக் அதன் டிஜிட்டல் வளர்ச்சியினை துரிதப்படுத்துவதன் அடிப்படையில் மிக வேகமாக மீண்டு வருகிறது என்றும் அந்த நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி மாட் பிரண்ட் தெரிவித்துள்ளார்.
வர்த்தகத்தில் எந்த பிரச்சனையும் இல்லை
இந்த நிறுவனத்தின் நிகர வருமானம் ஒரு வருடத்திற்கு முன்பு 1.52 பில்லியன் டாலர்களாக இருந்தது. ஆனால் வருவாய் 0.6% வீழ்ச்சி கண்டு 10.6 பில்லியன் டாலர்களாகவும் இருந்தது. இந்த நிலையில் தற்போது சீனா அமெரிக்கா இடையேயான பதற்றம் நிலவி வந்தாலும், அது வர்த்தகத்தில் பிரதிபலிக்கவில்லை என்பதும் தெளிவாகிறது. உண்மையில் இது மிக நல்ல விஷயமே.
இரு நாடுகளுக்கு எந்த மாதிரியான பிரச்சனை இருந்து வந்தாலும், வர்த்தகத்தில் அதன் பாதிப்பு இல்லை என்பதற்கு இதுவும் ஒரு சான்று.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக