🌟 சிம்ம ராசியின் அதிபதி சூரியன் ஆவார். சூரியனுடன் புதன் நட்பு என்ற நிலையில் நின்று அளிக்கக்கூடிய சுப மற்றும் அசுப பலன்களை நாம் விரிவாக காண்போம்.
🌟 கூர்மையான அறிவாற்றல் மற்றும் நிர்வாகத் திறமை கொண்டவர்கள்.
🌟 கணக்குகளில் நுட்பத் திறன் உடையவர்கள்.
🌟 எதையும் நிதானமாக சிந்தித்து முடிவு எடுக்கக்கூடியவர்கள்.
🌟 உயர்கல்வியோ அல்லது அதற்கு ஈடான அறிவு நுட்பத்தையோ உடையவர்கள்.
🌟 எங்கும் எதிலும் புள்ளி விவரமாகவும், அதே சமயம் கனிவுடனும் பேசக்கூடியவர்கள்.
🌟 கொடுத்த வாக்கை காப்பாற்றக்கூடியவர்கள்.
🌟 தனது குடும்ப விவகாரங்கள் எதுவானாலும் தனது கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளக்கூடியவர்கள்.
🌟 எப்பணியையும் திட்டமிட்டு செய்யக்கூடியவர்கள்.
🌟 மிகுந்த எச்சரிக்கை உணர்வு உடையவர்கள்.
🌟 தன்னுடைய பெயருக்கும், புகழுக்கும் கலங்கம் ஏற்படாதவாறு நடந்துக் கொள்ளக்கூடியவர்கள்.
🌟 கொடுக்கல் - வாங்கலில் கண்ணியம் கொண்டவர்கள். பொதுப் பணமாக இருப்பின் கணக்குகளை சரியாக கையாளக்கூடியவர்கள்.
🌟 பிறரை ஏமாற்றுவதோ அல்லது மற்றவர்களை ஏமாற்றவும் விடமாட்டார்கள்.
🌟 தீர்க்கமான பார்வையும், எளிமையும் அதே சமயம் கம்பீரமான தோற்றத்தையும் உடையவர்கள்.
🌟 பொருள் ஈட்டும் வல்லமையும், அதை தகுந்த முறையில் செலவும், அதே சமயம் எதிர்காலத்தை எண்ணி சேமிக்கும், பழக்கமும் கொண்டவர்கள்.
🌟 எங்கும் எதிலும் நேர்மையான குணத்தை உடையவர்கள். இதுவே எதிரிகள் உருவாக்க வழிவகுக்கும். இருப்பினும் கண்ணியக் குறைவு என்பது இருக்காது.
🌟 மனதில் பட்டதை வெளிப்படையாக பேசக்கூடியவர்கள்.
🌟 தங்களின் பிரச்சனைகளை எவரிடமும் பகிரமாட்டார்கள்.
🌟 எந்த நிலையானாலும் அது சுகமோ, துக்கமோ ஒரே மாதிரியாக இருக்கக்கூடியவர்கள்.
குறிப்பு: படங்கள் அனைத்தும் மாதிரிக்காக / உதாரணத்திற்காக கூகிளில் இருந்து எடுத்து வழங்கப்படுபவையே
ஆன்மிகமும் - ஜோதிடமும்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக