Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வெள்ளி, 23 அக்டோபர், 2020

பாட்டியின் புத்திசாலித்தனம்

ஒரு ஊரில் ஒரு வயசான பாட்டி தனியாக வசித்து வந்தாள். அந்த ஊரில் கொஞ்ச நாளா திருடங்க நடமாட்டம் அதிகமிருந்தது.

  ஒரு நாள் பாட்டி வெளியே போய்விட்டு வந்து பார்த்த போது வீட்டுக் கதவு திறந்திருந்தது. உள்ளே போன பாட்டிக்கு வீட்டுக்குள் ஒரு திருடன் திரைச்சீலைக்குப் பின்னால் மறைந்து இருப்பது தெரிந்து விட்டது.

 அவனை எப்படியும் தப்பிக்க விடக் கூடாது புத்திசாலித் தனமாக பிடிக்கனும்னு நினைச்ச பாட்டி உடனே ஒரு தந்திரம் செய்தாள்.

  அங்கிருந்த விளக்கு ஸ்டேண்டின் முன் நின்று கொண்டு, மாய விளக்கே என் மீது கோபமா? நான் வெளியே போய் வந்ததும் என்ன நடந்தது என்று கேட்பாயே இன்று ஏன் கேட்கவில்லை என்றாள். இதைக் கேட்டதும் திருடனுக்கு ஆச்சரியம். பேசும் விளக்கா என்று எட்டிப் பார்த்தான்.

 விளக்கு திரைச்சீலையின் அசைவில் லேசாக ஆட பாட்டி, கோபமில்லையா? அப்படியானால் என்ன நடந்தது சொல்கிறேன் கேள். பக்கத்து வீட்டு ஜூலி இன்று கடைத் தெருவுக்குப் போகும் போது ஒரு நாய் அவளைத் துரத்தியது. அவள் சத்தம் போட்டுக் கத்தினாள். 

 மீண்டும் விளக்கு காற்றில் அசைய, ஓ எப்படிக் கத்தினாள் என்று கேட்கிறாயா என பாட்டி கேட்டாள். திருடனுக்கோ ஒன்றும் புரியவில்லை. நமக்கு மட்டும் ஒன்னும் கேட்க வில்லை. விளக்கு ஆடுவது தெரியுது. ஆனால் கிழவி பேசுகிறாளே என்று குழம்பினான்.

 மாய விளக்கே ஜூலி எப்படிக் கத்தினாள் என்று சொல்கிறேன் என்றபடி பாட்டி உதவி உதவி என்று உரக்கக் கத்த அக்கம் பக்கம் வீட்டுக்காரர்கள் பாட்டிக்கு ஏதோ ஆபத்து என்று ஓடி வந்தவர்கள் திருடனைப் பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். 

 

நீதி :

 

காலம் அறிந்து அந்த இடத்தில் புத்திசாலித் தனமாக நடந்து கொள்ள வேண்டும்.

குறிப்பு: படங்கள் அனைத்தும்  மாதிரிக்காக / உதாரணத்திற்காக கூகிளில் இருந்து எடுத்து வழங்கப்படுபவையே 

இது போன்ற பல்வேறு செய்திகள், கதைகள் ,பொழுதுபோக்கு துணுக்குகள்,மின்னணு புத்தகங்கள் போன்றவற்றை பெற எங்கள் டெலிகிராம் சேனல்-லில் இணைந்து கொள்ளவும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக