Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

சனி, 10 அக்டோபர், 2020

உலகின் பழமையான விலங்கு எது?... மாணவனின் பதில்... - ரிலாக்ஸ் ப்ளீஸ்...!!


---------------------------------------

சிரிக்கலாம் வாங்க...!!

---------------------------------------

ஆசிரியர் : உலகின் பழமையான விலங்கு எது?

மாணவன் : ஜீப்ரா சார்...

ஆசிரியர் : எப்படி?

மாணவன் : ஏன்னா... அதுதான் ப்ளாக் ரூ ஒயிட்டா இருக்கு சார்...

ஆசிரியர் : 😠😠

---------------------------------------

ராஜா : டிரெயின்ல கடைசி கோச்ல உட்காந்தா டீ, காபி, டிபன் எதுவும் வர மாட்டேங்குது.

அருண் : புகார் கொடுக்க வேண்டியதுதானே?

ராஜா : கொடுத்தும் ஒன்னும் பிரயோஜனமில்லை.

அருண் : என்ன புகார் கொடுத்த?

ராஜா : கடைசி கோச்சை எடுத்து நடுவுல போடச்சொல்றேன், ஒரு பய கேக்கமாட்டேன்கிறான்.

அருண் : 😖😖

---------------------------------------

சிந்தனை துளிகள்...!!

---------------------------------------

 

பல மணி நேரம் சிந்தித்து கொண்டே இருப்பதா பொறுமை... இல்லை...

மனம் கூறும்படி சிந்தித்து முடிவெடுப்பதே பொறுமை ஆகும்...

நாம் பொறுமையாக இருந்தால் மட்டுமே எதையும் சாதிக்க முடியும்...

அன்பு அனைத்தையும் அழகாக காட்டும்...

நம்பிக்கை அனைத்தையும் நல்லதாக காட்டும்...

உழைப்பு அனைத்தையும் உயர்வாக காட்டும்...

இயற்கை அனைத்தையும் இறைவனாக காட்டும்...

வாழ்க்கை அனைத்தையும் வாய்ப்பாக காட்டும்...

---------------------------------------

படித்ததில் பிடித்தது...!

---------------------------------------

👉 பேசு... பணிவாக,

 

👉 உண்ணு... அளவாக,

 

👉 சுவாசி... ஆழமாக,

 

👉 தூங்கு... அமைதியாக,

 

👉 உடுத்து... அழகாக,

 

👉 செயல்படு... அச்சமின்றி,

 

👉 உழை... உண்மையாக,

 

👉 சிந்தி... சுயமாக,

 

👉 நம்பு... சரியாக,

 

👉 பழகு... நாகரீகமாக...

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக