Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

சனி, 10 அக்டோபர், 2020

Email, Internet தெரிந்திருந்தால்? வியக்க வைக்கும் பதில்... - ரிலாக்ஸ் ப்ளீஸ்...!!

 ------------------------------------------

சிரிக்கலாம் வாங்க...!!

------------------------------------------

தீபக் : யாரோ ஒரு மாசமா தினமும் காலிங் பெல்லை அடிச்சுட்டு ஓடிப்போயிடுறாங்க... பெரிய தொல்லையா போச்சு.

மதன் : நீ ஏன் காலிங் பெல்லை வெளியில வெச்ச?

தீபக் : 😠😠

------------------------------------------

மனைவி : முதன்முதலா உங்க கையை பிடிச்சப்போ எனக்கு எப்படி இருந்துச்சு தெரியுமா?

கணவன் : (அதவேற ஏன் ஞாபகப்படுத்தணும்னு நினைச்சுக்கிட்டே) எப்படி இருந்துச்சு செல்லம்?

மனைவி : அப்படியே கடவுள் என் கண் முன்னாடி சொர்க்கத்தை காட்டினார்.

கணவன் : இந்த கடவுளுக்கு எவ்வளவு ஓர வஞ்சனை பாத்தியா?.. ஒருத்தருக்கு சொர்க்கத்தையும், ஒருத்தருக்கு நரகத்தையும் காட்டியிருக்காரு...

மனைவி : 😡😡

------------------------------------------

தன்னம்பிக்கை கதை...!!

------------------------------------------

 

ஒரு  நிறுவனத்தில் தரை துடைக்கும் வேலைக்கு ஒருவர் விண்ணப்பித்திருந்தார். தரையை துடைத்து காட்டச் சொன்னார்கள். அவரும் நன்றாக துடைத்தார். அடுத்து சின்னதாய் ஒரு இன்டெர்வியூ . கடைசியில் அவரிடம் தகவல் தெரிவிப்பதற்காக ஈமெயில்  முகவரி கேட்டார்கள்.

 

எனக்கு இன்டர்நெட் ,ஈமெயில் -லாம் தெரியாதே என்றார். நிறுவனத்தில் வேலை பார்க்க விரும்புகின்றவருக்கு ஈமெயில் முகவரி இல்லையா? என்று அவரை அனுப்பி விட்டார்கள்.

 

வேலை இல்லை என்று சொன்னதும், அவருக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை... கையில் ஒரு 10 ரூபாய் இருந்தது. அதைக் கொண்டு மார்க்கெட்டில் வெங்காயம் வாங்கினார். அதை பக்கத்து குடியிருப்பில் கூவி கூவி விற்றார்.

 

10 ரூபாய் லாபம் கிடைத்தது. மீண்டும் வெங்காயம்... மீண்டும் விற்பனை. இப்படியே கொஞ்சம் கொஞ்சமாய் வெங்காயம் விற்று சில வருடங்களில் பெரிய வெங்காய வியாபாரி ஆகிவிட்டார்.

 

இந்த சூழ்நிலையில் ஒரு வங்கிக் கணக்கு திறப்பது சம்பந்தமாக ஒரு வங்கி ஊழியர் அவரிடம் பேச வந்தார். அவருடைய ஈமெயில்  முகவரி கேட்டார்.

 

வியாபாரி ஈமெயில்  முகவரி இல்லை என்று பதிலளிக்க, ஈமெயில்   இல்லாமலேயே இந்த காலத்தில் இவ்வளவு முன்னேறி விட்டீர்களா?

 

உங்களுக்கு மட்டும் இன்டர்நெட் ,ஈமெயில் எல்லாம் தெரிந்திருந்தால்? என்று ஆச்சரியமாக கேட்டார் வங்கி ஊழியர். அதெல்லாம் தெரிந்திருந்தால் ஒரு நிறுவனத்தில் தரையை துடைத்து கொண்டிருப்பேன் என்றார் வியாபாரி.

 

நீதி : வாய்ப்புகள் விலகும்போது கவலைப்படாதே... எல்லாம் நன்மைக்கே என்று எண்ணி தொடர்ந்து முயற்சி செய்தால் மிகப்பெரிய வெற்றி உனக்காக காத்திருக்கும்.

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக