
ரிலையன்ஸ் ஜியோ 5ஜி ஸ்மார்ட்போனை ரூ.5000-க்கும் குறைவான விலையில் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் ரூ.2500 முதல் 3500 வரை நிர்ணயிக்கப்படும் என கூறப்படுகிறது. இதுகுறித்து அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை
இந்நிலையில் 5ஜி கட்டமைப்புப் பணிக்காக உலகின் முன்னணி திறன்பேசி சிப் தயாரிப்பு நிறுவமான குவால்காம் உடன் ஜியோ கைகோர்க்க உள்ளது வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.
நாட்டின் 5ஜி நெட்வொர்க் உள்கட்டமைப்பு மற்றும் சேவைகளில் வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் மெய்நிகராகப்பட்ட ரேடியோ அக்சஸ் நெட்வொர்க் மூலம் 5ஜி சேவையை தொடங்க ஜியோ மற்றும் குவால்காம் நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன.
குறிப்பாக குவால்காம் 5ஜி RAN இயங்குதளங்களைப் பயன்படுத்தும் ரிலையன்ஸ் ஜியோ 5GNR மென்பொருளில் 1 Gbps மைல்கல்லை எட்டியுள்ளதாக ஜியோ மற்றும் குவால்காம் ஒன்றாக அறிவித்துள்ளன.
மேலும்
குவால்காம் 5ஜி
உச்சிமாநாட்டின்போது ரிலையன்ஸ் ஜியோ
இன்ஃபோகாமின் தலைவர்
மேத்யூ
ஓம்மன்
கூறுகையில், புதிய
தலைமுறைக்கான கிளவுட் நேட்டிவ் 5ஜி
RAN தொழில்நுட்பத்தை உருவாக்குவதில் குவால்காம் டெக்னாலஜிஸுடன் இணைந்து பணியாற்றுவதில் நாங்கள் மகிழச்சியடைகிறோம்
ஜியோ இயங்குதளங்கள் மற்றும் ஸ்கேல் இணைந்து குவால்காம் டெக்னாலஜிஸுடன் பாதுகாப்பான RAN தீர்வுகளின் மேம்பாடு உள்ளூர் உற்பத்திக்கான சிறந்த கலவையை வழங்குகிறது என்று மேத்யூ ஓம்மன் கூறியுள்ளார்.
இந்தியாவின் தலைவர்
ராஜன்
வாகாடியா கூறுகையில், ரிலையன்ஸ் ஜியோவுடனான எங்கள்
நீண்டகால உறவில்
ஒரு
புதிய
கட்டத்திற்குள் நுழைவதில் நாங்கள் மகிழ்சியடைகிறோம். 5ஜி
வசதிக்கான எங்கள்
மேம்பட்ட பார்வையை வளர்த்து இந்தியாவின் டிஜிட்டல் மாற்றத்தை ஆதரிக்கிறோம்
அதன்பின்பு ஜியோ அதன் பயனர்களுக்கு குறைந்த செலவில் மற்றும் அதிகமான 4ஜி நெட்வொர்க் கவரேஜ் மற்றும் இந்திய வாடிக்கையாளர்களுக்கான மேம்பட்ட 5ஜி உள்கட்டமைப்பு மற்றும் சேவைகளை வெளியிடுவதற்காள பயணத்தில் அவர்களுடன் நெருக்கமாக பணியாற்ற நாங்கள் எதிர்நோக்குகிறோம் என்றும் தெரிவித்தார்.
கேஜெட்டுகளும் - தொழில்நுட்பங்களும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக