Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

செவ்வாய், 6 அக்டோபர், 2020

சிரிக்க வைக்கும் குட்டிக்கதை... சிரிக்கலாம் வாங்க... - ரிலாக்ஸ் ப்ளீஸ்...!!

-------------------------------------------

சிரிக்கலாம் வாங்க...!!

-------------------------------------------

மனைவி : நான் ரெண்டு மணி நேரம் வெளியில போறேன்.. உங்களுக்கு ஏதாவது வாங்கணுமா?

கணவன் : இல்ல... இதுவே போதும்..

மனைவி : 😡😡

-------------------------------------------

சீனு : மசால் தோசை, மைசூர் போண்டா எல்லாம் தின்னக்கூடாதுன்னு சொன்னது உடல் நலத்துக்காகத்தானே டாக்டர்?

டாக்டர் : ஆமாம். இதுல என்ன சந்தேகம்?

சீனு : பொறாமையில சொல்லலியே?

டாக்டர் : 😳😳

-------------------------------------------

ராமு : நம்ம ஜோசியர் யோகம் அடிக்கப் போகுதுன்னு சொன்னது சரியாப் போச்சு...

தீபக் : ஏன்... லாட்டரி ஏதாவது விழுந்துச்சா?

ராமு : நீங்க வேற... நேத்து என் பெண்டாட்டி யோகத்துக்கும், எனக்கும் சரியான சண்டை. கடைசியில அவ அடிச்சிட்டா... என் கன்னம் வீங்கிப் போச்சு...

தீபக் : 😂😂

-------------------------------------------

சிரிக்க வைக்கும் குட்டிக்கதை...!!

-------------------------------------------

ஒரு அரசன் தன் வாழ்நாளில் உண்ணாத பழமொன்றை கொண்டு வருபவருக்கு 1000 பொன் பரிசளிக்கப்படும் என்றும், ஏற்கனவே உண்ட பழங்களைக் கொண்டு வருபவர்களுக்கு அதே பழத்தை அவர்களின் வாய்க்குள் அப்படியே திணிக்கப்படும் என்றும் அறிவித்தார்.

 

அடுத்தநாள் காலையிலேயே நீண்ட வரிசையில் மக்கள் பழங்களுடன் காத்திருந்தார்கள். வாழைப்பழம், மாம்பழம் இப்படியே பல பழங்களுடன் வந்தவர்கள் அவர்களின் வாய்க்குள் திணிக்கப்பட்ட நிலையில், அன்னாசிப்பழத்துடன் வந்தவரின் வாயில் இரத்தம் பீறிட்டும் அவர் வாய்விட்டு சிரித்துக் கொண்டிருந்தார்...

 

அவன் சிரிப்பதைக் கண்ட அரசன் கோபத்தில், ஏன் சிரிக்கிறாய்? எனக் கேட்டார். எனக்குப் பின்னால் பலாப்பழத்துடன் நிற்பவரை நினைத்து சிரித்தேன் என்று கூறினான்.😂😂

-------------------------------------------

விடுகதைகள்...!!

-------------------------------------------

1. உறையில் உறங்குவான், உயிரைப் பறிப்பான். அவன் யார்?

 

விடை : வாள்.

 

2. ஆயிரம்பேர் அணி வகுத்தாலும் ஒரு தூசி கிளம்பாது. அவர்கள் யார்?

 

விடை : எறும்புக்கூட்டம்.

 

3. எரித்தால் சிவப்பு. அணைத்தால் கறுப்பு. அது என்ன?

 

விடை : கரித்துண்டு.

 

4. கரித்துண்டு நான், கடினத்திற்கு நான், காண்போரைக் கவருவேன். நான் யார்?

 

விடை : வைரம்.

 

5. இரண்டு பெண்கள், இரட்டைப் பிறவிகள். ஒருத்தி கீழே வந்தால், ஒருத்தி மேலே போவாள். அவர்கள் யார்?

 

விடை : தராசுத் தட்டுகள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக