Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

செவ்வாய், 6 அக்டோபர், 2020

முன்னேற்றத்திற்கு நல்லது... எது தெரியுமா?...🤔 - ரிலாக்ஸ் ப்ளீஸ்...!!

----------------------------------------

கலக்கலான காமெடிகள்...!!

----------------------------------------

ராமு : வீடு கட்ட லோன் வாங்கின பணத்துல ரெண்டாவது கல்யாணம் பண்ணிக்கிட்டியாமே நிஜமா? 

சோமு : இப்போதைக்கு சின்ன வீடு போதும்னு ஜோசியர் சொன்னார். 

ராமு : 😁😁

----------------------------------------

ஜோதிடர் : வலது கையில் இருக்கும் இந்த மச்சத்தால் உங்களுக்கு நல்ல மனைவி அமைவாள்.

ராஜ் : அடேய்.... அது சூடுவெச்ச தழும்பு... அதை வெச்சதே என் மனைவி தான்டா...!! 

ஜோதிடர் : 😨😨

----------------------------------------

முன்னேற்றத்திற்கு நல்லது... எது தெரியுமா?

----------------------------------------

⭐ தப்பை தைரியமாக ஏற்றுக்கொண்டு அதை சரி செய்ய முயல்வதே நம் முன்னேற்றத்திற்கு நல்லது...

⭐ அடுத்தவர் மேல் அதை சுமத்தினால் அது பல மடங்கு விரோதத்தோடு சேர்த்து அசுர பலத்தோடு நமக்கே திரும்ப வரும்...

----------------------------------------

இது உண்மையா?

----------------------------------------

குடை மழையை நிறுத்தாது...

ஆனால், அது நம்மை நனைய விடாமல் தடுக்கும்...

தைரியம் பிரச்சனைகளை தீர்க்காது...

ஆனால், அது அதை எதிர்த்து போராட உதவும்...

எந்த சூழ்நிலையிலும் தைரியத்தை கைவிடாதீர்கள்.

----------------------------------------

சிரிக்கலாம் வாங்க...!!

----------------------------------------

🌟 5 நிமிடத்தில் ஒரு பெண் சமாதானம் ஆகிறாள் எனில் அது தாய்...👩‍👧

🌟 15 நிமிடத்தில் ஒரு பெண் சமாதானம் ஆகிறாள் எனில் அது சகோதரி...👫

🌟 30 நிமிடத்தில் ஒரு பெண் சமாதானம் ஆகிறாள் எனில் அது தோழி...👫

🌟 3 மணி நேரத்திற்கு மேலாகியும் சமாதானப்படுத்த முடியவில்லை எனில் அது காதலி...💑

🌟 உனக்கு சமாதனம் செய்யும் சந்தர்ப்பம் கூட கிடைக்கவில்லை எனில் அது மனைவி...!!👩‍👧

----------------------------------------

சிந்தனை வரிகள்...!!

----------------------------------------

எது உன்னை அச்சம் கொள்ளச் செய்கிறதோ அதை அஞ்சாமல் எதிர்த்து நில். 

வெற்றி என்பது பெற்றுக்கொள்வதற்கு... தோல்வி என்பது கற்றுக்கொள்வதற்கு.

வெற்றிக்கும், தோல்விக்கும் வித்தியாசம் அதிகம் இல்லை.

கடமையை செய்தால் வெற்றி...

கடமைக்கு செய்தால் தோல்வி...

நம்மால் முடியாது என்று நினைக்கும் செயல்களை, யாரோ ஒருவர் எங்கோ ஓர் இடத்தில் அதை செய்து கொண்டுதான் இருக்கிறார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக