Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வியாழன், 1 அக்டோபர், 2020

வாழ்க்கையில் தோற்ற இரண்டு பேர்...யார்? யார்?... படித்ததில் பிடித்தது - ரிலாக்ஸ் ப்ளீஸ்...!!

------------------------------------------------------

கலக்கலான காமெடிகள்...!!

------------------------------------------------------

Director : நம்மளோட அடுத்த படம் 100 நாள் ஓடணும்...

Assistant Director : இல்லை 500 நாள் ஓடணும்...

Director : காமெடி பண்ணாத...

Assistant Director: முதல்ல யாரு சார் காமெடி பண்ணுனது...

Director : 😏😏

------------------------------------------------------

நோயாளி : டாக்டர் நான் தூங்கும்போது எனக்கு நிறைய கனவு வருது... ஆனா ஒன்னுமே சரியா தெரிய மாட்டேங்குது...

டாக்டர் : கண்ணாடி போட்டுக்கோங்க... தெளிவா தெரியும்...

நோயாளி : 😳😳

------------------------------------------------------

இன்றைய கடி...!!

------------------------------------------------------

ஒரு பூனை ஒரு நாயை பாத்து சிரிச்சுதாம்... ஏன் தெரியுமா?

.

.

.

.

.

நாய் பூனைய பாத்து ஜோக் சொல்லுச்சாம்...😂😂

கப்பல் ஏன் ஆடி ஆடி போகுது தெரியுமா?

.

.

.

.

.

ஏன்னா அது தண்ணியில போகுது...😂😂

------------------------------------------------------

குறளும்... பொருளும்...!!

------------------------------------------------------

அழுக்கா றுடையான்கண் ஆக்கம்போன் றில்லை

ஒழுக்க மிலான்கண் உயர்வு.

விளக்கம் :

பொறாமையுடையவனுக்கும், நல்லொழுக்கமில்லாதவனுக்கும் அமையும் வாழ்வு, உயர்வான வாழ்வாகக் கருதப்பட மாட்டாது.

------------------------------------------------------

படித்ததில் பிடித்த வரிகள்...!!

------------------------------------------------------

⭐ சிறிய தவறுகளை திருத்திக் கொள்ளாவிட்டால், பெரிய தவறுகளை தவிர்க்க முடியாது...

⭐ கோபம் ஒரு கொடிய அமிலம்... அது விழும் இடத்தை விட இருக்கும் இடமே மிகவும் அபாயகரமானது...

------------------------------------------------------

🤔இது உண்மையா?🤔

------------------------------------------------------

ஒருவர் உங்களைத் தாழ்த்திப் பேசும் போது ஊமையாய் இருங்கள்....!

புகழ்ந்து பேசும் போது செவிடனாய் இருங்கள்...!

எளிதில் வெற்றி பெறுவீர்கள்.

வாழ்க்கையில் தோற்றவர்கள் இரண்டு பேர்...

ஒருவர் யார் பேச்சையும் கேட்காதவர்.

மற்றொருவர், எல்லோருடைய பேச்சையும் கேட்பவர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக